Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஸ்டார் வீரர்கள் வருகை.. அசுர பலம் பெற்ற டெல்லி அணி.. சீனியரை நீக்கிய லக்னோ..இன்றைய போட்டியில் அதிரடி

மும்பை: முன்னணி வீரர்களின் கம்பேக்கால் டெல்லி அணி யாராலும் தடுக்க முடியாத ஒன்றாக உருவெடுத்துள்ளது.

ஐபிஎல் தொடரின் 15வது லீக் ஆட்டத்தில் இன்று டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் லக்னோ அணிகள் மோதுகின்றன.

இதில் டாஸ் வென்றுள்ள லக்னோ அணி கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

 அசுர பலத்தில் டெல்லி

அசுர பலத்தில் டெல்லி

கடந்த 2 போட்டிகளில் தடுமாறி வந்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி, இன்று அதிரடி மாற்றத்துடன் களமிறங்கியுள்ளது. அந்த அணியில் அயல்நாட்டு வீரர்களின் குறைபாடு இருந்தது. இந்நிலையில் இன்று ஓப்பனிங்கிற்கு டேவிட் வார்னர் மற்றும் பவுலிங்கில் முன்னணி வீரரான ஆண்ட்ரிக் நார்ட்ஜே ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளனர். நார்ட்ஜேவுக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில் எப்படி ஆடப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

சீனியர் வீரர் நீக்கம்

சீனியர் வீரர் நீக்கம்

இதே போல லக்னோ அணியிலும் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த அணி விளையாடிய முதல் மூன்று போட்டியிலும் மணிஷ் பாண்டே சரிவர சோபிக்கவில்லை. இதனால் அவரை நீக்கிவிட்டு, கிருஷ்ணப்பா கவுதமுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார் கே.எல்.ராகுல். இவர் கடந்த சீசனில் சிஎஸ்கேவில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்த நிலையில் இந்த சீசனில் வாய்ப்பு பெற்றுள்ளார்.

அதிரடி இருக்கிறதா?

அதிரடி இருக்கிறதா?

இந்த போட்டியில் மும்பையில் உள்ள DY பாட்டில் மைதானத்தில் நடைபெறுகிறது. இங்கு நல்ல பேட்டிங் டிராக் என்பதால் முதலில் விளையாடும் அணி சராசரியாக 170 ரன்களுக்கு மேல் அடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. எனினும் லக்னோ அணியிலும் அதனை துரத்தி வெற்றி பெற்ற அட்டகாச பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.

 இரு அணி விவரங்கள்

இரு அணி விவரங்கள்

லக்னோ ப்ளேயிங் 11 : கே.எல்.ராகுல், குயிண்டன் டிகாக், எவின் லீவிஸ், தீபக் ஹுடா, ஆயுஸ் பதோனி, க்ருணால் பாண்ட்யா, ஜேசன் ஹோல்டர், கிருஷ்ணப்பா கவுதம், ஆண்ட்ரூ டை, ரவி பிஷ்னாய், ஆவேஷ் கான்

டெல்லி அணி ப்ளேயிங் 11: பிரித்வி ஷா, டேவிட் வார்னர், ரிஷப் பண்ட், ரோவ்மென் போவெல், சர்ஃப்ராஸ் கான், லலித் யாதவ், அக்‌ஷர் பட்டேல், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முஸ்திவிசூர் ரஹ்மான், ஆன்ரிக் நார்ட்ஜே

Story first published: Thursday, April 7, 2022, 19:36 [IST]
Other articles published on Apr 7, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+