Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வார்னருக்கு இப்படி ஒரு வீக்னஸா..!! முதல் போட்டியிலேயே வெட்ட வெளிச்சமானது.. இளம் வீரரின் அதீத திறமை!!

மும்பை: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டேவிட் வார்னரின் வீக் பாயிண்ட் என்பது தெரியவந்துள்ளது.

15வது லீக் போட்டியில் இன்று டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் கடுமையாக மோதி வருகின்றன.

இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணி பெரிய ஏமாற்றம் காத்திருந்தது.

ரசிகர்களின் எதிர்பார்ப்பு

ரசிகர்களின் எதிர்பார்ப்பு

கடந்த 2 போட்டிகளாக டெல்லி அணியில் அயல்நாட்டு வீரர்கள் இன்றி தவித்து வந்தது. ஆனால் இன்று அதிரடி நாயகன், டேவிட் வார்னர் டெல்லி அணிக்காக அறிமுகமானார். அதுவும் பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக ஆடிவிட்டு, இந்தியா திரும்பியுள்ளார். இதனால் தான் பட்ட அவமானங்களுக்கு பதிலடி தரும் வகையில் வாணவேடிக்கை காட்டுவார் என எதிர்பார்த்த நிலையில் ஏமாற்றத்தையே கொடுத்தார்.

மோசமான பேட்டிங்

மோசமான பேட்டிங்

ஒவ்வொரு பந்தையும் மிகவும் சிரமப்பட்டு எதிர்கொண்டார். பிட்ச்-ல் தான் ஏதேனும் சிரமம் உள்ளதா என்று பார்த்தால், மறுமுணையில் பிரித்வி ஷா 34 பந்துகளில் 61 ரன்களை விளாசி வந்தார். 12 பந்துகளில் வெறும் 4 ரன்களை மட்டுமே அடித்திருந்த வார்னர், இறுதியில் ரவி பிஷ்னாய் பந்துவீச்சில் மோசமாக அவுட்டாகி வெளியேறினார்.

வீக்னஸ் பாய்ண்ட்

வீக்னஸ் பாய்ண்ட்

இந்நிலையில் ஐபிஎல் தொடரில் டேவிட் வார்னருக்கு ரவி பிஷ்னாய் தான் இனி புதிய வீக்னஸ் என தெரியவந்துள்ளது. 21 வயதாகும், ரவி பிஷ்னாய் ஐபிஎல் தொடரில் இதுவரை 3 முறை வார்னருக்கு எதிராக பந்துவீசியுள்ளார். இதில் வார்னர் முழுமையாக 10 பந்துகளை கூட எதிர்த்து நின்றதில்லை.

மொத்தமாக இதுவரை 6 பந்துகள் மட்டுமே வீசி 3 முறை விக்கெட் எடுத்துள்ளார். 5 ரன்கள் மட்டுமே கசிந்துள்ளது.

 எதிர்கால திட்டம்

எதிர்கால திட்டம்

டி20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் தான் நடைபெறவுள்ளது. அதில் வார்னர் போன்ற ஒரு அதிரடி ஆட்டக்காரரை சமாளிப்பதற்கு கண்டிப்பாக இந்தியாவுக்கு ரவி பிஷ்னாய் தேவைப்படுவார். இதனையடுத்து இவர்கள் இருவரையும் வைத்து ரசிகர்கள் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

Story first published: Thursday, April 7, 2022, 21:10 [IST]
Other articles published on Apr 7, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+