Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் புஸ்பா எண்டரி.. டேவிட் வார்னர் களமிறங்கும் நாள் அறிவிப்பு.. மகிழ்ச்சியில் டெல்லி ரசிகர்கள்

மும்பை: ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக டேவிட் வார்னர் களமிறங்கும் நாள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்லி ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

ஐபிஎல் தொடர் தொடங்கி இன்றுடன் 10 நாட்கள் முடிவடைந்துவிட்டது. அதற்குள் சீனியர், ஜூனியர் இந்திய வீரர்கள் ஐபிஎல் தொடரை ரனகலப்படுத்திவிட்டனர்.

இந்த நிலையில், நட்சத்திர ஆஸ்திரேலிய வீரர்கள் ஐபிஎல் தொடரில் இன்று முதல் தங்களது அணிக்காக விளையாட உள்ளனர்.

ஆஸி. வீரர்கள்

ஆஸி. வீரர்கள்

இதனால் ஐபிஎல் போட்டி மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது மட்டுமல்லாமல் சுவாரஸ்யமும் கூடியுள்ளது. பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தில் இருந்த ஆஸ்திரேலிய வீரர்கள் டெஸ்ட் தொடர் முடிந்தவுடன் இந்தியா வந்து குவாரண்டைன் விதியை எல்லாம் முடித்துவிட்டனர்.

வினோத விதி

வினோத விதி

ஆனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், பாகிஸ்தான் தொடர் முடியும் வரை ஒப்பந்த வீரர்கள் வேறு எந்த தொடரிலும் விளையாட் கூடாது என்று வினோத உத்தரவை பிறப்பித்தது. இந்த நிலையில், நேற்றுடன் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் தொடர் முடிவடைந்த நிலையில், இன்று முதல் ஐபிஎல் தொடரில் விளையாட ஆஸ்திரேலிய வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

வார்னர் ரிட்டர்ன்

வார்னர் ரிட்டர்ன்

இன்று கொல்கத்தா அணியில் பாட் கம்மின்ஸ் களமிறங்குகிறார். இந்த நிலையில் ரசிகர்கள் பெரும் எதிர்பார்த்த வார்னர் நாளை டெல்லி அணியில் களமிறங்குகிறார். லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் வார்னரும், தென்னாப்பிரிக்க வீரர் நோக்கியாவும் விளையாட உள்ளதாக அணியின் துணை பயிற்சியாளர் வாட்சன் அறிவித்துள்ளார்.

நாளை முதல் அதிரடி

நாளை முதல் அதிரடி

கடந்த சீசனில் வார்னர், ஃபார்மில் இல்லாத காரணத்தால் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டு ஐதராபாத் அணியில் பிளேயிங் லெவனிலேயே இடம்பெறாமல் இருந்தார். ஆனால் அதன் பிறகு நடைபெற்ற டி20 உலககோப்பையில் தொடர் நாயகன் விருதை வார்னர் வென்றார். இதனால் ஐபிஎல் தொடரில் இழந்த மரியாதையை மீட்க நாளை வெறித்தனமான எண்டரியை வார்னேவிடமிருந்து எதிர்பார்க்கலாம்.

Story first published: Wednesday, April 6, 2022, 17:58 [IST]
Other articles published on Apr 6, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+