Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வார்னர் உண்மையிலேயே பெரிய மனுசன்.. 92 ரன்களில் வார்னர் எடுத்த முடிவு.. நெகிழ்ச்சியில் பொவேல்

மும்பை: ஐபிஎல் தொடரின் 50வது லீக் ஆட்டத்தில் டெல்லி அணி வீரர் டேவிட் வார்னர் செய்த காரியம் ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய செய்தது.

Recommended Video

David Warner 92 ரன்னில் சொன்ன வார்த்தை! Powell நெகிழ்ச்சி | Oneindia Tamil

ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி முதலில் பேட் செய்தது. 19வது ஓவர் முடிவில் டெல்லி அணி 3 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது.

டேவிட் வார்னர் 92 ரன்களுடன் களத்தில் இருந்தார். 20வது ஓவரை வெஸ்ட் இண்டீஸ் வீரர் போவெல் எதிர்கொண்டார்.

கடைசி ஓவரின் முதல் பந்தில் போவெல் சிங்கிள்ஸ் ஆடி வார்னருக்கு சதம் அடிக்கும் வாய்ப்பை தருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பொவேல் தொடர்ந்து பெரிய ஷாட்களை ஆடி 20வது ஓவரில் 19 ரன்கள் அடித்தார்.இதனால் வார்னரின் சதம் அடிக்கும் வாய்ப்பு பறிபோனது. இதனால் ரசிகர்கள் பொவேல் கோபமாக இருந்தனர்

IPL 2022 – David Warner sacrifice his century for team score vs SRH

ஆனால் இது குறித்து பேசிய போவேல், 19வது ஓவர் முடிவில் நான் வார்னரிடம் கூறினேன். முதல் பந்தில் நான் சிங்கிள்ஸ் எடுத்து விடுகிறேன். நீங்கள் சதம் அடிக்க முயற்சி செய்யுங்கள் என்று கூறினேன்.அதற்கு வார்னர், அப்படி எல்லாம் கிரிக்கெட் ஆட கூடாது. நீ எப்போதும் போல் பெரிய ஷாட் ஆடி ரன்களை விளாசு என்றார்.

இதே போன்று பொவேல் அடிக்கும் ஒவ்வொரு ஷாட்டுக்கும் வார்னர் கூக்குரல் போட்டு உற்சாகப்படுத்தினார். சதம் போனாலும் பரவாயில்லை, அணியின் ஸ்கோர் தான் முக்கியம் என்று வார்னர் எடுத்த முடிவு ரசிகர்களை நெகிழ வைத்தது.

Story first published: Thursday, May 5, 2022, 23:34 [IST]
Other articles published on May 5, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+