For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டெல்லி அணி வெற்றி.. புள்ளி பட்டியலில் அதிரடி மாற்றம்.. சபாஷ் ரிஷப் பண்ட்

மும்பை: ஐபிஎல் தொடரின் 50வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வீழ்த்தியது.

மும்பை பார்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

தொடக்க வீரராக டெல்லி அணியில் மந்தீப் சிங்,டேவிட் வார்னர் ஆகியோர் களமிறங்கினர்.

ஹாட்ரிக் சிக்சர்

ஹாட்ரிக் சிக்சர்

மந்தீப் சிங் 5 பந்தை சாப்பிட்டு டக் அவுட்டாகி வெளியேறினார். மிட்செல் மார்ஷ் 10 ரன்கள் எடுத்திருந்த போது சென் அபார்ட் பந்துவீச்சில் அவரிடமே பிடிப்பட்டு ஆட்டமிழந்தார். ஒரு முனையில் விக்கெட்டுகள் இழந்தாலும் டேவிட் வார்னர் தனது வழக்கமான அதிரடி ஷாட்களை ஆடி ரன் குவித்தார். இதனால் டெல்லி அணியின் ஸ்கோர் கிடுகிடுவென உயர்ந்தது. ஸ்ரேயாஸ் கோபால் வீசிய ஒரு ஓவரில் ரிஷப் பண்ட் ஹாட்ரிக் சிக்சர் மற்றும் பவுண்டரி அடித்து அசத்தினார். ஆனால் அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். 16 பந்துகளில் அவர் 26 ரன்கள் அடித்திருந்தார்.

அபார பார்ட்னர்ஷிப்

அபார பார்ட்னர்ஷிப்

இதன் பின்னர் டேவிட் வார்னர், ரொமன் போவெல் ஆகியோர் சேர்ந்து ஐதராபாத் அணி பந்துவீச்சை பதம் பார்த்தனர். இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தது. வார்னர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 92 ரன்கள் அடிக்க, போவெல் 67 ரன்களை விளாசினார். உம்ரான் மாலிக் வீசிய அதிவேக கடைசி ஓவரில் போவெல் 19 ரன்களை விளாசி இருந்தார். இதனால் டெல்லி அணி 3 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்தது.

சொதப்பிய முன்வரிசை

சொதப்பிய முன்வரிசை

208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்கள் அபிஷேக் சர்மா 7 ரன்களிலும், வில்லியம்சன் 4 ரன்களிலும் ஆட்டமிழக்க,ராகுல் திரிபாதி 22 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதனையடுத்து ஏய்டன் மார்க்ரம் , பூரான் ஜோடி அதிடிரயாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டது.

Recommended Video

David Warner 92 ரன்னில் சொன்ன வார்த்தை! Powell நெகிழ்ச்சி | Oneindia Tamil
டெல்லி வெற்றி

டெல்லி வெற்றி

முக்கிய கட்டத்தில் ஏய்டன் மார்க்ரம் 25 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் பூரான் மட்டும் தனி நபராக நின்று சிக்சர், பவுண்டரி என விளாசினார், பூரான் 34 பந்துகளில் 62 ரன்கள் எடுக்க, மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் 20 ஓவர் முடிவில் ஐதராபாத் அணி 186 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.இதன் மூலம் புள்ளி பட்டியலில் டெல்லி 5வது இடத்திற்கு முன்னேறியது. ஐதராபாத் 6வது இடத்துக்கு சரிந்தது.

Story first published: Thursday, May 5, 2022, 23:54 [IST]
Other articles published on May 5, 2022
English summary
IPL 2022- DC beat srh by 21 runs and moves to 5th position டெல்லி அணி வெற்றி.. புள்ளி பட்டியலில் அதிரடி மாற்றம்.. சபாஷ் ரிஷப் பண்ட்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+