Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பயிற்சி கூட இல்ல.. கொரோனாவை மீறி வென்றது எப்படி? ரிஷப் சொன்ன ரகசியம்.. பெரிய மனசு காட்டிய குல்தீப்

மும்பை: ஐபிஎல் 15வது சீசனில் கொரோனாவையும் மீறி டெல்லி அணி அதிரடி வெற்றி பெற்றது குறித்து கேப்டன் ரிஷப் பண்ட் பேசியுள்ளார்.

டெல்லி அணியில் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் கடந்த சில நாட்களாக வீரர்கள் ஒரு பயிற்சி முகாமில் கூட பங்கேற்கவில்லை.

டெல்லி அணியில் இடம்பெற்றிருந்த மார்ஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் கூட நிலவியது.

அதிரடி வெற்றி

அதிரடி வெற்றி

ஆனால் இத்தனை தடைகளையும் மீறி இன்று களம் கண்ட டெல்லி அணி பஞ்சாப்பை 115 ரன்களுக்கு சுருட்டி அசத்தியது. இதே போன்று பேட்டிங்கிலும் அதிரடி காட்டிய அந்த அணி 10.3வது ஒவரில் வெற்றி பெற்று அசத்தியது. வார்னர் ஹாட்ரிக் அரைசதம் அடித்து தனது புஸ்பா ஸ்டைலில் வெற்றியை கொண்டாடினார்.

பயத்தில் இருந்தோம்

பயத்தில் இருந்தோம்

இதனிடையே, வெற்றிக்கு பிறகு பேசிய கேப்டன் ரிஷப் பண்ட், முதலில் எங்களுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. எங்கள் அணியில் மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதியானதாக தகவல் வந்தது. இதனால் நாங்கள் கொஞ்சம் அச்சப்பட்டோம். போட்டி ரத்து செய்யப்படலாம் என்று கூட பேச்சு அடிப்பட்டது. ஆனால், நாங்கள் அது பற்றி எல்லாம் கவனிக்க போவது இல்லை. போட்டியை மட்டும் பற்றி சிந்திப்போம் என்று முடிவு எடுத்தோம்.

மிகவும் முக்கியமானது

மிகவும் முக்கியமானது

எதிர்மறையான விசயத்தை தள்ளிவைத்துவிட்டு, ஒரு அணியாக 100 சதவீதம் போட்டியில் திறனை வெளிப்படுத்தும் உத்வேகத்தில் இருந்தோம். வார்னர், பிரித்வி ஷாவுக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியும். இதனால், அவர்களுக்கான பணியை வழங்கிவிடுவோம். இந்த வெற்றி மிகவும் முக்கியமானது என்று பண்ட் கூறினார்.

Recommended Video

IPL 2022: Kuldeep Yadav's classy gesture, shares Man of the Match award with Axar | Oneindia Tamil
குல்தீப் பெரிய மனசு

குல்தீப் பெரிய மனசு

இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற குல்தீப் யாதவ், இந்த விருதுக்கு நன்றி. ஆனால் இந்த விருதை அக்சர் பட்டேலுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அவர் இந்த ஆட்டத்தில் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த சீசனில் எப்படி பந்து வீச வேண்டும் என்ற தெளிவோடு இருக்கிறேன். தவறாக பந்துவீசினால் கூட அது பற்றி கவலைப்படாமல் அடுத்த பந்தை சரியாக வீச முயற்சிக்கிறேன் என்று குல்தீப் கூறினார்.

Story first published: Wednesday, April 20, 2022, 23:31 [IST]
Other articles published on Apr 20, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+