For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டிவி ரிமோட்டை உடைத்த பாண்டிங்.. பாட்டிலும் பறந்தன..ஹோட்டல் ரூம்மில் நடந்த சம்பவம்

இந்த நிலையில், தற்போது பூரண குணமடைந்துள்ள பாண்டிங், தனது குவாரண்டைனை முடித்து கொண்டு அணிக்கு திரும்பியுள்ளார்.

இந்த நிலையில், தற்போது பூரண குணமடைந்துள்ள பாண்டிங், தனது குவாரண்டைனில் முடிந்து அணிக்கு திரும்பினார்.

அப்போது பேசிய பாண்டிங், ஹோட்டலில் தாம் செய்த காரியத்தை வெளியே கூறினார். அவர் அளித்த பேட்டியை தற்போது காண்போம்.

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

கொரோனாவால் ஹோட்டல் அறையில் தனிமையில் 5 நாட்களுக்கு மேல் தங்கியது கொடுமையாக இருந்தது இப்போது அணிக்குள் மீண்டும் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த சீசன் எங்களுக்கு ஒரு வெற்றி பெற்றால் மீண்டும் தோல்வி அதன் பிறகு மீண்டும் வெற்றி என்று தான் செல்கிறது.

தவறு எங்கே?

தவறு எங்கே?

நான் எப்போதும் சொல்வது உண்டு. டி20 கிரிக்கெட்டில் நீங்கள் 38 ஓவர் கூட சரியாக விளையாடி இருக்கலாம்.ஆனால் 2 ஓவரில் தவற செய்தால் போட்டியே தலைக்கீழாக மாறிவிடும். இந்த சீசனில் அப்படி தான் இருக்கிறது. பல போட்டியில் வெற்றி அருகே வந்து அடைய முடியாமல் நிற்கிறோம். தற்போது அனைவரும் வெற்றி பெற வேண்டும் என்ற உத்வேகத்துடன் இருந்தோம்.

ரிமோட்கள் உடைந்தன

ரிமோட்கள் உடைந்தன

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது நான் ஹோட்டலில் தனிமையில் தான் இருந்தேன். அப்போது கோபத்தில் மூன்று, நான்கு டிவி ரிமோட்களை சுவற்றில், தூக்கி எறிந்து உடைத்துவிட்டேன். இதே போன்று தண்ணீர் பாட்டிலையும் தூக்கி எறிந்தேன். பயிற்சியாளர் என்றால், களத்தில் தான் அமைதியாக இருக்க வேண்டும்

என் கையில் இல்லை

என் கையில் இல்லை

நான் மைதானத்தில் இல்லை என்பதால் தான் கோபம் அடைந்தேன். இது போன்ற முடிவுகள் எல்லாம் நம் கையில் இல்லை. அப்போது நான் மைதானத்தில் இல்லை என்று நினைத்து மிகவும் எரிச்சல் அடைந்தேன் என்று பாண்டிங் கூறினார். டெல்லி அணி தனது அடுத்த போட்டியில் கொல்கத்தாவுடன் மோதுகிறது. இதில் பாண்டிங் பங்கேற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, April 27, 2022, 19:01 [IST]
Other articles published on Apr 27, 2022
English summary
IPL 2022 – DC Coach Ricky Ponting Breaks TV remotes in Hotel டிவி ரிமோட்டை உடைத்த பாண்டிங்.. பாட்டிலும் பறந்தன..ஹோட்டல் ரூம்மில் நடந்த சம்பவம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+