Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சேவாக் பாதி.. சச்சின் பாதி.. கலந்து செய்த கலவை பிரித்வி ஷா.. இந்திய அணியின் கதவு திறக்குமா?

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த நட்சத்திரமாக விளங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட பிரித்வி ஷா, கடந்த சில ஆண்டுகளாக அதற்கான பாதையில் இருந்து தவறிவிட்டார்.

பள்ளி கிரிக்கெட்டில் சச்சின் சாதனையை முறியடித்து பின்னர், 2018ஆம் ஆண்டு அண்டர் 19 கேப்டனாக பதவியேற்ற பிரித்வி ஷா, உலககோப்பையை வென்று அசத்தினார்.

அப்போதே இந்த சிறுவன் பெரிய உச்சத்தை தொடுவார் என கிரிக்கெட் விமர்சகர்கள் கணித்தனர். அதற்கான வழியும் பிறந்தது.

பாதை மாறியது

பாதை மாறியது

அதற்கு தகுந்தாற் போல், 2018ஆம் ஆண்டு முதல் டெஸ்ட் போட்டியிலேயே பிரித்வி ஷா சதம் விளாசினார். குறைந்த வயதில் சதம் விளாசிய 6வது வீரர் என்ற பெருமையும் பிரித்வி ஷாவிற்கு கிடைத்தது. ஆனால் அதன் பிறகு காயம், தடை செய்யப்பட்ட மருந்தை எடுத்து கொண்டு ஆறு மாதம் தடை என பிரித்வி ஷாவின் பாதை மாற தொடங்கியது.

அணியில் இடமில்லை

அணியில் இடமில்லை

இதன் பின்னர் ரஞ்சி போட்டியில் விளையாடி மீண்டும் இந்திய அணிக்கு வந்தாலும், அதிரடியாக ஆடுவதாத முயற்சி செய்து விரைவில் ஆட்டமிழந்து இடத்தை தவறவிட்டார். ஐபிஎல் தொடரில் மோசமான ஃபார்ம் காரணமாக பிளேயிங் லெவனில் கூட தனது இடத்தை இழந்தார் பிரித்வி ஷா. பிரித்வி ஷாவிடம் பேட்டிங்கில் ஒரு குறை இருக்கிறது என பயிற்சியாளர் பாண்டிங் கூறினார்.

பாண்டிங் குற்றச்சாட்டு

பாண்டிங் குற்றச்சாட்டு

இந்த குறையை போக்க, அவர் தீவிர பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அதற்கு நான் உதவுகிறேன் என்று கூறினாலும், பிரித்வி ஷா ஒத்துழைப்பு தர மாட்டேன் என்கிறார் என்று பாண்டிங்கும் சோகத்துடன் கூறினார். இந்த நிலையில், மீண்டும் டெல்லி அணிக்காக விளையாடும் பிரித்வி ஷா, தனது குறையை நிறையாக்கி விட்டார் என தெரிகிறது.

பிரித்வி ஷா அதிரடி

பிரித்வி ஷா அதிரடி

லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் பிரித்வி ஷா, தனது பழைய அதிரடியை காட்டினார். சேவாக்கின் அதிரடியும், சச்சினின் ஷாட் யுத்திகளும் கலந்த கலவையாக நேற்று 34 பந்துகளில் 61 ரன்கள் சேர்த்தார். இதே போல் இந்த சீசனில் அவர் விளையாடினால், இந்திய அணியின் பய்றசியாளராக டிராவிட் இருக்க, பிரித்வி ஷாவுக்கான இந்திய அணியின் கதவு திறக்கப்படும்.

Story first published: Friday, April 8, 2022, 13:26 [IST]
Other articles published on Apr 8, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+