For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வார்னர் கோல்டன் டக்.. அதிரடி காட்டிய மார்ஷ், சர்ஃபிராஸ் .. ஆட்டத்தையே மாற்றிய லிவிங்ஸ்டோன்

மும்பை: ஐபிஎல் தொடரின் 64வது லீக் ஆட்டத்தில் டெல்லி எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

டெல்லி அணியில் சர்பிராஸ் கானை தொடக்க வீரராக வாய்ப்பு வழங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது பண்ட், பாண்டிங் தலைமை.

ஆனால் அவர்கள் ஏன் அப்படி ஒரு முடிவை எடுத்தார்கள் என ரசிகர்களுக்கு தனது பேட்டிங் மூலம் பதில் கூறினார் சர்பிராஸ் கான்.

சர்பிராஸ் அதிரடி

சர்பிராஸ் அதிரடி

ஆட்டத்தின் முதல் பந்திலேயே வார்னர் விக்கெட்டை லிவிங்ஸ்டோன் வீழ்த்தி அதிர்ச்சி அழைத்தார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் 8 ஆண்டுக்கு பிறகு வார்னர் கோல்டன் டக் ஆனார். ஆனால் வார்னர் சென்றாலும் பரவாயில்லை என முதல் பந்தில் இருந்தே அதிரடி காட்டினார் சர்பிராஸ். சர்பிராஸ் ஷாட் தேர்வை பார்த்து, இவ்வளவு நாளா இந்த தங்கத்தை ஏன் வீணாக்கினீர்கள் என்று ரசிகர்கள் கேட்டனர்.

Recommended Video

Delhi Capitals அதிரடி தொடக்கம் மோசமான Middle Order | Oneindia Tamil
மார்ஷ் 63 ரன்கள்

மார்ஷ் 63 ரன்கள்

6,4,4,4,4 என தொடர்ந்து பேட்டிங்கில் கலக்கினார் சர்பிராஸ் கான். 16 பந்துகளில் 32 ரன்களை சர்பிராஸ் கான் விளாசினார். அதன் பிறகு ஆர்ஷ்தீப் பந்துவீச்சில் ஷர்பிராஸ் பெவிலியன் திரும்பினார். இதனைத் தொடர்ந்து மிட்செல் மார்ஷ் கொஞ்சம் பொறுப்பாக விளையாடி ரன்களை சேர்த்தார். அதன் பிறகு அவர் அதிரடியை காட்ட, 48 பந்துகளில் 63 ரன்களை மார்ஷ் விளாசினார். இதில் 3 சிக்சரும், 4 பவுண்டரிகளும் அடங்கும்.

ஏமாற்றிய பண்ட்

ஏமாற்றிய பண்ட்

இதன் பின்னர் லலித் யாதவ் 21 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார். டெல்லி அணி 180 ரன்களை மேல் தொடும் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் கேப்டன் ரிஷப் பண்ட் ஒரு சிக்சர் விளாசி 7 ரன்களில் லிவிங்ஸ்டோன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இது ஆட்டத்தில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட போவெல் 2 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

டெல்லி 159 ரன்கள்

டெல்லி 159 ரன்கள்

சிஎஸ்கேவில் இருந்த போது லார்டாக இருந்த ஷர்துல், டெல்லிக்கு வந்ததும் பேப்பர் ரவுடியாக மாறிவிட்டார். 3 ரன்களில் அவர் ஆட்டமிழக்க, அக்சர் பட்டேல் தனியாக நின்று 20 பந்துகளில் 17 ரன்கள் சேர்த்தார். இதனால் டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. ஆர்ஷ்தீப், லிவிங்ஸ்டோன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Story first published: Monday, May 16, 2022, 22:06 [IST]
Other articles published on May 16, 2022
English summary
IPL 2022 – DC set 160 runs target for Punjab வார்னர் கோல்டன் டக்.. அதிரடி காட்டிய மார்ஷ், சர்ஃபிராஸ் .. ஆட்டத்தையே மாற்றிய லிவிங்ஸ்டோன்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+