Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டேவிட் வார்னர் 2 சாதனை.. ரிஷப் பண்ட் ஹாட்ரிக் சிக்சர்.. ஐதராபாத்தை வெளுத்து வாங்கிய டெல்லி

மும்பை: ஐபிஎல் தொடரின் 50வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணியும், டெல்லி அணியும் மோதின. இதில் டெல்லி அணியின் டேவிட் வார்னர் 2 சாதனையை படைத்துள்ளார்.

Recommended Video

David Warner 92 ரன்னில் சொன்ன வார்த்தை! Powell நெகிழ்ச்சி | Oneindia Tamil

மும்பை பார்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

தொடக்க வீரராக டெல்லி அணியில் மந்தீப் சிங்,டேவிட் வார்னர் ஆகியோர் களமிறங்கினர்.

டக் அவுட்

டக் அவுட்

மந்தீப் சிங் 5 பந்தை சாப்பிட்டு டக் அவுட்டாகி வெளியேறினார். மிட்செல் மார்ஷ் 10 ரன்கள் எடுத்திருந்த போது சென் அபார்ட் பந்துவீச்சில் அவரிடமே பிடிப்பட்டு ஆட்டமிழந்தார். ஒரு முனையில் விக்கெட்டுகள் இழந்தாலும் டேவிட் வார்னர் தனது வழக்கமான அதிரடி ஷாட்களை ஆடி ரன் குவித்தார். இதனால் டெல்லி அணியின் ஸ்கோர் கிடுகிடுவென உயர்ந்தது.

ஹாட்ரிக் சிக்சர்

ஹாட்ரிக் சிக்சர்

ரிஷப் பண்டும் இன்று அடித்து ஆட வேண்டும் என்ற உத்வேகத்தில் களமிறங்கினார். குறிப்பாக ஸ்ரேயாஸ் கோபால் வீசிய ஒரு ஓவரில் ரிஷப் பண்ட் ஹாட்ரிக் சிக்சர் மற்றும் பவுண்டரி அடித்து அசத்தினார். ஆனால் அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். 16 பந்துகளில் அவர் 26 ரன்கள் அடித்திருந்தார்.

வார்னர் சாதனை

வார்னர் சாதனை

இதன் பின்னர் டேவிட் வார்னர், ரொமன் போவெல் ஆகியோர் சேர்ந்து ஐதராபாத் அணி பந்துவீச்சை பதம் பார்த்தனர். டேவிட் வார்னர் 34 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதில் 7 பவுண்டரிகளும், 2 சிக்சர்கள் அடங்கும். இதன் மூலம் டி20 போட்டியில் அதிக முறை அரைசதம் விளாசிய வீரர் என்ற பெருமையை டேவிட் வார்னர் படைத்தார். இதே போன்று டி20 போட்டியில் 400 சிக்சர் அடித்த வீரர் என்ற மைல்கல்லையும் வார்னர் எட்டினார்.

பொவேல் அபாரம்

பொவேல் அபாரம்

மறுபக்கம், போவெல் 30 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதில் 6 சிக்சர்கள் அடங்கும். இதனைத் தொடர்ந்து டேவிட் வார்னர் சதம் விளாசுவதற்காக பெரிய ஷாட்களை ஆடினார். வார்னர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 92 ரன்கள் அடிக்க, போவெல் 67 ரன்களை விளாசினார். உம்ரான் மாலிக் வீசிய அதிவேக கடைசி ஓவரில் போவெல் 19 ரன்களை விளாசி இருந்தார். இதனால் டெல்லி அணி 3 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்தது.

Story first published: Thursday, May 5, 2022, 22:14 [IST]
Other articles published on May 5, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+