For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் ஸ்கிரிப்டா என இன்று தெரிஞ்சிடும்.. டெல்லி, பஞ்சாப்பால் புள்ளி பட்டியலில் மாற்றம்

மும்பை: ஐபிஎல் தொடரில் இன்று 64வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியும், டெல்லி அணியும் மோதி வருகின்றன.

இந்தப் போட்டியின் முடிவு ஐபிஎல் புள்ளி பட்டியலில் பெரிய மாற்றத்தை தரும். ஆம், இன்று வெற்றி பெறும் அணி புள்ளி பட்டியலில் 4வது இடத்துக்கு செல்லும்.

தோல்வி அடையும் அணிக்கு பிளே ஆப் வாய்ப்பு கொஞ்சம் சிக்கலாகிவிடும். இந்த நிலையில் டெல்லி அணியில் 2 முக்கிய மாற்றங்கள் நிகழும்.

இன்று தெரிந்துவிடும்

இன்று தெரிந்துவிடும்

டெல்லி அணியில் தொடக்க வீரராக சர்பிராஸ் கானும், வேகப்பந்துவீச்சாளர் கலில் அகமதும் சேர்க்கப்பட்டுள்ளனர். நவி மும்பையில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீசுவதாக அறிவித்தது. இந்த ஆட்டத்தில் டெல்லி அணி வென்றால், சனிக்கிழமையே, பிளே ஆப்க்கு செல்ல போகும் அணி எது என்று தெரிந்துவிடும்.

நெட்டிசன்கள் கேள்வி

நெட்டிசன்கள் கேள்வி

இதுவே பஞ்சாப் அணி வென்றால் கடைசி நாள் அன்று தான் பிளே ஆப்க்கு செல்ல போகும் அணி எது என்று தெரியும். இதனால் , இன்றைய போட்டியில் பஞ்சாப் வென்றால் அது ஸ்கிரிப்ட் என்றும், டெல்லி வென்றால் உண்மையாகவே அப்படி தான் பா நடக்கிறது என்றும் நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

கைதால் சர்ச்சை

கைதால் சர்ச்சை

நேற்று ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக சிபிஐ இருவரை கைது செய்து விசாரித்து வருவதால், கிரிக்கெட் ரசிகர்களிடையே இந்த மாதிரி ஒரு குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது கூட பரவாயில்லை, ஜெய்ஷாவுக்கு சொந்த ஊர் குஜராத் என்பதால், ஐபிஎல் தொடரில் தற்போது குஜராத் அணி முதலிடத்தில் இருப்பதாக ரசிகர்கள் மீம்ஸ் போட்டு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பிசிசிஐ பொறுப்பு

பிசிசிஐ பொறுப்பு

ஆனால் கிரிக்கெட்டில் ஒருவர் அல்லது இருவரை வைத்து ஸ்பாட் பிக்சிங், மேட்ச் பிக்சிங் வைத்து செய்ய வாய்ப்புள்ளது. ஆனால் ஒட்டுமொத்த போர்டும் இணைந்த மேட்ச் பிக்சிங் செய்வது இயலாத காரியம். இதனால் ஐபிஎல் மீது 100 சதவீத நம்பகத்தன்மையை ரசிகர்கள் மத்தியில் கொண்டு வரும் பொறுப்பு பிசிசிஐக்கு உள்ளது.

Story first published: Monday, May 16, 2022, 20:24 [IST]
Other articles published on May 16, 2022
English summary
IPL 2022 – DC vs PBKS – Netizens trolls the BCCI after cbi arrest ஐபிஎல் ஸ்கிரிப்டா என இன்று தெரிஞ்சிடும்.. டெல்லி, பஞ்சாப்பால் புள்ளி பட்டியலில் மாற்றம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+