For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கடைசி ஓவரில் வெடித்த சர்ச்சை.. ஆட்டத்தை நிறுத்த சொன்ன ரிஷப் பண்ட்.. மீண்டும் நடுவரால் வந்த குழப்பம்

மும்பை: ஐபிஎல் தொடரின் 15வது சீசனில் ராஜஸ்தான், டெல்லி அணிகள் மோதிய ஆட்டத்தில் சர்ச்சை வெடித்தது.

Recommended Video

IPL 2022 : Rishabh Pant loses cool as DC vs RR match ends with no-ball controversy | Oneindia Tamil

இதில் ஆட்டத்தை நிறுத்துமாறு டெல்லி அணி கேப்டன் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கும் நடுவரின் தவறான முடிவு தான் காரணம் என்று கூறப்படுகிறது.

புள்ளி பட்டியலில் 3வது இடத்தில் இருந்த ராஜஸ்தானும், 6வது இடத்தில் இருந்த டெல்லியும் மோதின.

விறுவிறுப்பான ஆட்டம்

விறுவிறுப்பான ஆட்டம்

இதில் ராஜஸ்தான் அணியின் பட்லர் 57 பந்துகளில் சதம் விளாசினார். இது நடப்பு சீசனில் அவர் அடித்த 3வது சதமாகும். படிக்கல் அரைசதம், சாம்சன் 46 ரன்கள் எடுக்க, 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 222 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணியும் கிட்டதட்ட இலக்கை நோக்கி நகர்ந்தது.

ஹாட்ரிக் சிக்சர்

ஹாட்ரிக் சிக்சர்

கடைசி 2 ஓவரில் 36 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் பிரசித் கிருஷ்ணா 19வது ஓவரில் ரன்களை விட்டு தராமல் ஒரு விக்கெட்டையும் எடுத்தார். இதனால் கடைசி ஓவரில் வெற்றிக்கு 36 ரன்கள் தேவைப்பட்டது. இந்த நிலையில் மெக்காய் வீசிய முதல் 3 பந்திலும் ஹாட்ரிக் சிக்சரை பொவேல் பறக்கவிட, போட்டியில் விறுவிறுப்பு எகிறியது.

நோ பால் சர்ச்சை

நோ பால் சர்ச்சை

மெக்காய் வீசிய 3வது பந்து, பேட்ஸ்மேன் நெஞ்ச் வரை வந்ததால், இதனை நோ பால் என்று அறிவிக்க வேண்டும் என்று குல்தீப் யாதவ் முறையிட்டார். ஆனால், அது நோ பால் இல்லை என்று நடுவர் சொல்ல, கடுப்பான டெல்லி அணி பியிற்சியாளர் குழு உறுப்பினர் மைதானத்துக்கு வந்து நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

இதனையடுத்து ரிஷப் பண்டும், டெல்லி அணியின் வீரர்களை ஆட்டத்தை நிறுத்திவிட்டு வரும்மாறு கூறினார். இதனால் மைதானத்தில் பரபரப்பு தொற்றி கொண்டது. இதனையடுத்து நடுவர்கள் டெல்லி அணியை சமாளிக்க மீண்டும் ஆட்டம் தொடர்ந்தது. இது பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தியதாக டெல்லி ரசிகர்கள் நினைக்கின்றனர்.போட்டி முடிந்ததும் இரு அணி வீரர்களும் கை குலுக்காமல் சென்றனர்.

ரிஷப் பதிலடி

ரிஷப் பதிலடி

இது குறித்து கருத்து தெரிவித்த சஞ்சு சாம்சன், நடுவரின் முடிவே இறுதியானது. அது நோ பால் இல்லை. ஆனால் பேட்டிங் செய்யும் அணி நோ பால் கேட்பது வாடிக்கை தான் என்று விமர்சித்தார். இதற்கு பதிலடி தந்த ரிஷப் பண்ட், அது நோ பால் தான். நடுவரின் முடிவு குறித்து ஏதும் செய்ய முடியாது. ஏதும் எங்கள் கையில் இல்லை என்று கூறினார்.

Story first published: Saturday, April 23, 2022, 10:42 [IST]
Other articles published on Apr 23, 2022
English summary
IPL 2022 – DC VS RR – No ball controversy again by umpire decision கடைசி ஓவரில் வெடித்த சர்ச்சை.. ஆட்டத்தை நிறுத்த சொன்ன ரிஷப் பண்ட்.. மீண்டும் நடுவரால் வந்த குழப்பம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+