ரூ.14 கோடி அம்பேல்!! ஐபிஎல் -ஐ தவறவிடும் தீபக் சஹார்.. சிஎஸ்கேவுக்கு பெரும் அதிர்ச்சி- என்ன காயம்??
சென்னை: தீபக் சஹாரின் நிலைமை மோசமாக உள்ளதால், சிஎஸ்கேவின் ஐபிஎல் கனவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான கடைசி மற்றும் 3வது டி20 போட்டி நடைபெற்றது.
இதில் இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற போதும், வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த சஹார் காயமடைந்தது தான்.

தீபக் சஹார்
தீபக் சாஹர் வீசிய முதல் 2 ஓவர்களிலேயே அடுத்தடுத்து 2 விக்கெட்டுகள் சரிந்தன. அவரின் ஸ்விங்கிற்கு எதிரணியால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. ஆனால் துரதிஷ்டவசமாக 2வது ஓவரில் கடைசி பந்தை வீசும் போது சஹாருக்கு காலில் காயம் ஏற்பட்டு பந்துவீச முடியாத சூழல் உருவானது. இதனையடுத்து அவசர அவசரமாக மைதானத்தை விட்டு அவர் வெளியே கொண்டு செல்லப்பட்டார்.

தசைநார் பிரச்சினை
அவருக்கு சாதாரண காயம் இருக்கும் என்ற நினைத்த நிலையில் தசை நார்கள் கிழிந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது. இதனால் அடுத்து வரும் இலங்கை தொடரில் கூட அவரால் பங்கேற்க முடியாது. ஏனென்றால் தசைப்பிடிப்பு இருந்தாலே அவ்வளவு சீக்கிரம் குணமடைய முடியாது. ரோகித் சர்மாவும் இதே பிரச்சினையால் தான் ஒன்றரை மாதம் விளையாடாமல் இருந்தார். இதில் தசைநார் கிழிந்தால் பெரிய சிரமம் ஆகும்.

சிஎஸ்கேவுக்கு சிக்கல்
கிரேட் ஒன் என்ற அடிப்படையில் கிழிந்திருந்தால் சஹார் குணமடைய குறைந்தது ஒன்றரை மாதங்கள் ஆகும். இது சிஎஸ்கேவுக்கு தான் பெரும் இடியாக இறங்கியுள்ளது. ஏனென்றால் தீபக் சஹாரால் ஐபிஎல் தொடரின் முதல் பாதி ஆட்டங்களில் விளையாட முடியாது.
Recommended Video

தோனிக்கு சிக்கல்
மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணி அவரை அதிகபட்சமாக ரூ.14 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. அந்த அணியின் பந்துவீச்சில் முதுகெலும்பாக தென்பட்டார்.
ஆனால் தற்போது காயம் ஏற்பட்டுள்ளதால், தீபக் சஹாருக்கு பதிலாக மாற்று வீரரை தயார் செய்ய வேண்டிய சூழ்நிலையில் கேப்டன் தோனி உள்ளார். துரதிஷ்டவசமாக இந்த முறை ஷர்துல் தாக்கூரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications