Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகக்கோப்பையிலும் இல்லை??.. தீபக் சஹாருக்கு 4 மாதங்கள் ஓய்வு.. அப்படி என்னதான் ஆனது??

மும்பை: ஐபிஎல் தொடரை தொடர்ந்து தற்போது இந்திய அணி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளார் தீபக் சஹார்.

15வது ஐபிஎல் தொடர் கடந்த 3 வாரங்களாக விறுவிறுப்புக்கு சற்றும் பஞ்சம் இன்றி நடைபெற்று வருகிறது.

Recommended Video

Deepak Chahar out for 4 months, doubtful for T20 World Cup | OneIndia Tamil

இதில் 4 போட்டிகளில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்த சென்னை அணி தற்போதுதான் மீண்டுள்ளது.

சிஎஸ்கேவின் எதிர்பார்ப்பு

சிஎஸ்கேவின் எதிர்பார்ப்பு

சென்னை அணியின் தோல்விகளுக்கு தீபக் சஹார் இல்லாதது முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது. காலில் தசை நார் கிழிவு பிரச்சினை காரணமாக சிகிச்சை பெற்று வந்த தீபக் சஹார் வரும் 26ம் தேதி ஐபிஎல் தொடருக்கு வருவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக வலைப்பயிற்சியையும் தொடங்கியிருந்தார்.

முதுகுவலி பிரச்சினை

முதுகுவலி பிரச்சினை

அதன்பின்னர் திடீரென அவர் ஐபிஎல்-ல் இருந்தே விலகுவதாக அறிவிக்கப்பட்டது. முதுகு பகுதியில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவரால் சரியாக பவுலிங் வீச முடியாது எனத்தெரிவிக்கப்பட்டது. அது குணமடைய 2 மாதங்களாவது ஆகும் என்பதால் சிஎஸ்கேவின் ஒட்டுமொத்த நம்பிக்கையும் போனது.

புதிய பூகம்பம்

புதிய பூகம்பம்

இந்நிலையில் இந்திய அணிக்கே ஆப்பு வந்துள்ளது. தீபக் சஹாருக்கு தற்போது ஏற்பட்டுள்ள முதுகு வலி பிரச்சினை சரியாக குறைந்தது 4 மாதங்கள் வரை ஆகும் என பிசிசிஐ வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. அவர் உடல்நிலை முன்னேற்றத்தை பொறுத்து அது அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகக்கோப்பை எப்போது

உலகக்கோப்பை எப்போது

டி20 உலகக்கோப்பை வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு தீபக் சஹார் முக்கிய பவுலராக இருக்கிறார். இந்த நிலைமையில் 4 மாதங்கள் ஓய்வு, அதன் பிறகு பழைய உடற்தகுதியை பெற வேண்டும் என்பதால் அவர் உலகக்கோப்பை தொடரிலும் பங்கேற்க வாய்ப்பில்லை எனத்தெரிகிறது.

Story first published: Thursday, April 14, 2022, 12:25 [IST]
Other articles published on Apr 14, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+