Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தீபக் சஹாருக்கு 2வது காயம்.. ஐபிஎல் தொடரில் இருந்து முற்றிலும் விலகல்?.. சோகத்தில் சிஎஸ்கே அணி!!

மும்பை: தீபக் சஹார் மீது அதீத நம்பிக்கை வைத்திருந்த சென்னை அணிக்கு பெரும் சிக்கல் உருவாகியுள்ளது.

Recommended Video

Big blow for CSK as back injury puts doubt on Deepak Chahar's return in IPL 2022 | OneIndia Tamil

15வது ஐபிஎல் சீசன் கடந்த 3 வாரங்களாக விறுவிறுப்புக்கு பஞ்சம் இன்றி நடைபெற்று வருகிறது.

இதில் புதிய அணிகள் கலக்கி வரும் நிலையில், 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் பரிதாப நிலையில் உள்ளது.

சிஎஸ்கே பரிதாபம்

சிஎஸ்கே பரிதாபம்

இந்த தொடரில் சென்னை அணி விளையாடிய முதல் 3 போட்டிகளில் தோல்விகளையே சந்தித்தது. 3 அடிக்கு பின்னர் மீண்டு வரும் என ரசிகர்கள் நம்பி இருந்தனர். ஆனால் 4வது முறையும் மிக மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. சென்னை அணியின் இந்த தோல்விகளுக்கு முக்கிய பவுலர் தீபக் சஹார் இல்லாதது தான் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

 தற்போது நிலை என்ன

தற்போது நிலை என்ன

காலில் ஏற்பட்ட தசைநார் கிழிவு பிரச்சினை காரணமாக தீபக் சஹாரால் விளையாட முடியவில்லை. பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தீவிர பயிற்சி பெற்று வந்தார். சமீபத்தில் வலைப்பயிற்சியை தொடங்கிய அவர், ஏப்ரல் 26ம் தேதிக்குள் சிஎஸ்கே அணிக்குள் வந்துவிடுவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் சென்னை அணி ரசிகர்களும் நம்பிக்கையுடம் இருந்தனர்.

புதிய பூகம்பம்

புதிய பூகம்பம்

இந்நிலையில் புது பூகம்பம் கிளம்பியுள்ளது. பயிற்சியில் ஈடுபட்டிருந்த தீபக் சஹாருக்கு முதுகுப்பகுதியில் பிரச்ச்சினை ஏற்பட்டுள்ளது. சஹாருக்கு ஏற்கனவே இந்த பிரச்சினை இருந்து சரியான நிலையில், மீண்டும் அது பெரிதாக உருவெடுத்துள்ளது. 2 காயங்கள் ஏற்பட்டுவிட்டதால் அவர் இனி இந்த ஐபிஎல் தொடரில் விளையாடுவது மிகக்கடினம் என கூறப்பட்டுள்ளது. ரசிகர்களும் நம்பிக்கையிழந்துவிட்டனர்.

நேரமே இல்லையே

நேரமே இல்லையே

சென்னை அணி இன்று இரவு ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் மோதுகிறது. தீபக் சஹாரின் இடத்தை தற்போதைக்கு முகேஷ் சௌத்ரி, டுவைன் பிரிட்டோரியஸ் ஆகியோர் தான் நிரப்பி வருகின்றனர். எனவே இருக்கும் வீரர்களுக்கு புத்துணர்ச்சியை கொடுத்து வெற்றி பாதைக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Tuesday, April 12, 2022, 12:44 [IST]
Other articles published on Apr 12, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+