For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தீபக் சஹாரின் தற்போதைய நிலை என்ன.. சிஎஸ்கேவுக்கு விடிவு காலம் எப்போது.. புதிய அப்டேட் இதோ!!

மும்பை: சிஎஸ்கே அணி பவுலிங்கில் சிரமப்பட்டு வரும் நிலையில் தீபக் சஹாரின் தற்போதைய நிலை குறித்து தெரியவந்துள்ளது.

Recommended Video

CSK vs LSG போட்டியில் தோல்விக்கு காரணம் இதுதான் - Jadeja விளக்கம்

ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் மோசமாக தடுமாறி வருகிறது.

இந்தாண்டு இதுவரை நடைபெற்றுள்ள முதல் 2 லீக் போட்டிகளிலும் சென்னை அணி தோல்வியையே சந்தித்தது.

சிஎஸ்கே பரிதாபம்

சிஎஸ்கே பரிதாபம்

ஐபிஎல் வரலாற்றில் இதுவரை சென்னை அணி முதல் 2 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்தது இதுவே முதல் முறை. முதல் போட்டியில் சிஎஸ்கேவின் பேட்டிங் முக்கிய சொதப்பலாக இருந்தது. இதற்காக மொயீன் அலி கொண்டு வரப்பட்டு, 2வது போட்டியில் பேட்டிங் சிறப்பாக இருந்தது. ஆனால் அதில் 210 ரன்கள் அடித்தும் அதனை டிஃபண்ட் செய்ய முடியவில்லை. பவுலிங்கிற்கு நம்பிக்கையான வீரர்கள் இல்லை.

ரசிகர்கள் புலம்பல்

ரசிகர்கள் புலம்பல்

இந்நிலையில் சிஎஸ்கேவின் நிலையை பார்த்தவுடன் ரசிகர்களின் கவனம் முழுக்க தீபக் சஹாரின் பக்கம் திரும்பியுள்ளது. அவர் எப்போது தான் அணிக்கு வருவார், அவர் மட்டும் இருந்திருந்தால் சிஎஸ்கேவின் நிலை இப்படி இருந்திருக்காது என புலம்பி வருகின்றனர். அவர்கள் கூறுவது சரிதான். நேற்றைய போட்டியில் சஹார் இருந்திருந்தால் கடைசி நேரத்தில் ரன்களை கசியவிட்டிருக்க மாட்டார். முதல் பவர் ப்ளேவிலேயே விக்கெட்களை எடுத்திருப்பார்.

சஹாரின் நிலை என்ன

சஹாரின் நிலை என்ன

இப்படிபட்ட தீபக் சஹார் தற்போது பெங்களூரு கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறார். காலில் தசைநார் கிழிவு ஏற்பட்டதால் இவ்வளவு நாட்கள் மருத்துவ சிகிச்சையில் இருந்துவிட்டு தற்போது தான் பவுலிங் பயிற்சிக்கே வந்துள்ளார். அவர் முழு உடற்தகுதியுடன் பவுலிங் வீசிவிட்டால், ஐபிஎல்-க்கு வந்துவிடுவார்.

எப்போது விளையாடுவார்

எப்போது விளையாடுவார்

ஆனால் அது அவ்வளவு எளிதானது அல்ல. கொஞ்சம் சிரமப்பட்டு பவுலிங் வேகத்தை அதிகரித்தால் கூட தசைப்பகுதிகளில் வலி ஏற்படும். நிதானமாக தான் மீண்டு வர முடியும். எப்படியும் இன்னும் ஒரு மாதத்திற்கு அவரால் வர முடியாது என்பது தான் வல்லுநர்கள் கூறும் கருத்தாக உள்ளது.

Story first published: Friday, April 1, 2022, 13:47 [IST]
Other articles published on Apr 1, 2022
English summary
IPL 2022: Deepak Chahar's Fitness update, when he will return to CSk
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+