For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நடப்பு சாம்பியன் சிஎஸ்கே நாக் அவுட்.. 7வது தோல்வியை பெற்ற சிஎஸ்கே.. பேட்டிங்கில் சொதப்பிய ஜடேஜா,தோனி

புனே: ஐபிஎல் 15வது சீசனிலிருந்து நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் வெளியேறியது.

இதன் மூலம் 10 போட்டியில் விளையாடிய சிஎஸ்கே அணி, 6 புள்ளிகளுடன் 9வது இடத்தை பிடித்துள்ளது.

புனேவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. மிட்செல் சாண்டனருககு பதிலாக மொயின் அலி பிளேயிங் லெவனில் இடம்பெற்றார்.

சுழற்பந்துவீச்சில் தடுமாற்றம்

சுழற்பந்துவீச்சில் தடுமாற்றம்

தொடக்க வீரராக களமிறங்கிய கோலி, டுபிளஸிஸ் ஜோடி முதல் விக்கெட்டுக்கு அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தது. இதனால் ஆர்சிபி அணி 30 பந்துகளிலேயே 50 ரன்களை கடந்தது. இதனையடுத்து சிஎஸ்கேவின் இளம் வேகப்பந்துவீச்சாளருக்கு பதிலாக சுழற்பந்துவீச்சைளர்களை பந்துவீச தோனி அழைத்தார்.டுபிளஸிஸ் 22 பந்தில் 38 ரன்கள் அடித்து மொயின் அலி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

தீக்சனா அபாரம்

தீக்சனா அபாரம்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மெக்ஸ்வேல் 3 ரன்களில் ரன் அவுட் ஆனார். அதன் பின்னர் மொயின் அலி வீசிய பந்தை கணிக்க தவறிய விராட் கோலி போல்ட் ஆனார். இருப்பினும் இளம் வீரர் லோம்ரர் அதிரடியாக ஆடி 27 பந்துகளில் 42 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். பிரிட்டோரியஸ் வீசிய 18வது ஓவரில் மட்டும் 18 ரன்கள் சென்றது. இதன் பின்னர் தீக்சனா வீசிய 19வது ஓவரில் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்ந்தது. இறுதியில் தினேஷ் கார்த்திக் கடைசி ஓவரில் 2 சிக்சரை பறக்கவிட, ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது.

கான்வே அரைசதம்

கான்வே அரைசதம்

174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிஎஸ்கே அணி களமிறங்கியது. அதிரடியாக விளையாடிய ருத்துராஜ் 28 ரன்களில் ஆட்டமிழக்க, அதன் பின்னர் பேட்டிங் செய்ய வந்த உத்தப்பா, ராயுடு சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஒரு முனையில் விக்கெட் இழந்தாலும் மறு பக்கத்தில் கான்வே 37 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.

சொதப்பிய பேட்டிங்

சொதப்பிய பேட்டிங்

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஜடேஜா 3 ரன்களில் ஆட்டமிழக்க, தோனியும் 2 ரன்களில் வெளியேறினார். இதனால் சிஎஸ்கே அணி தோல்வி உறுதியானது. மொயின் அலி மட்டும் போராடி 34 ரன்கள் சேர்த்தார். இறுதியில் பிரிட்டோரியஸ் 13 ரன்கள் எடுக்க, சிஎஸ்கே அணி 20 ஓவர் முடிவில் 160 ரன்களை மட்டுமே எட்டி 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

Recommended Video

RCB vs CSK - Challengers Get Past The Super Kings To Get Into The Top Four | Oneindia Tamil
தோனி கருத்து

தோனி கருத்து

தோல்வி குறித்து பேசிய கேப்டன் தோனி, சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் சூழலுக்கு ஏற்ப ஷாட் தேர்வுகளை செய்யவில்லை என்று தெரிவித்தார். விக்கெட்டுகளை பறிகொடுக்காமல் விளையாடி இருந்தால், இறுதியில் இவ்வளவு ரன்களை அடிக்க வேண்டும் என்ற நிலை வந்திருக்காது என்று குறிப்பிட்ட தோனி, செய்த தவறுகளையிம், குறைகளையும் சரி செய்தாலே வெற்றி கிடைக்கும் என்றார். வெற்றி பெற்றால் புள்ளி பட்டியல் அதன் பணியை செய்யும் என்றும் தோனி கூறினார்.

Story first published: Wednesday, May 4, 2022, 23:31 [IST]
Other articles published on May 4, 2022
English summary
IPL 2022 – Defending champion CSK Knocked out of the tournament நடப்பு சாம்பியன் சிஎஸ்கே நாக் அவுட்.. 7வது தோல்வியை பெற்ற சிஎஸ்கே.. பேட்டிங்கில் சொதப்பிய ஜடேஜா,தோனி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+