Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனியை மிஞ்சிய ரிஷப் பண்ட்.. டென்ஷன் கொடுத்த பஞ்சாப்.. கூலாக நின்ற டெல்லி.. பட்டியலில் ஆர்சிபி சரிவு

மும்பை: ஐபிஎல் தொடரின் 64வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

Recommended Video

Delhi Capitals அபார வெற்றி! Punjab Kings பரிதாப தோல்வி | Oneindia Tamil

விறுவிறுப்பான இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

டெல்லி அணியில் சர்பிராஸ் கானும், கலில் அகமதும் பிளேயிங் லெவனுக்கு திரும்பினர்.

சர்பிராஸ் அதிரடி

சர்பிராஸ் அதிரடி

ஆட்டத்தின் முதல் பந்திலேயே வார்னர் விக்கெட்டை லிவிங்ஸ்டோன் வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார். எனினும் மெறுமுனையில் அதிரடி காட்டிய சர்பிராஸ்,6,4,4,4,4 என தொடர்ந்து பேட்டிங்கில் கலக்கினார் சர்பிராஸ் கான். 16 பந்துகளில் 32 ரன்களை சர்பிராஸ் கான் விளாசினார். அதன் பிறகு ஆர்ஷ்தீப் பந்துவீச்சில் ஷர்பிராஸ் பெவிலியன் திரும்பினார். இதனைத் தொடர்ந்து மிட்செல் மார்ஷ் கொஞ்சம் பொறுப்பாக விளையாடி ரன்களை சேர்த்தார். அதன் பிறகு அவர் அதிரடியை காட்ட, 48 பந்துகளில் 63 ரன்களை மார்ஷ் விளாசினார். இதில் 3 சிக்சரும், 4 பவுண்டரிகளும் அடங்கும்.

ஏமாற்றிய பண்ட்

ஏமாற்றிய பண்ட்

இதன் பின்னர் லலித் யாதவ் 21 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார். கேப்டன் ரிஷப் பண்ட் ஒரு சிக்சர் விளாசி 7 ரன்களில் லிவிங்ஸ்டோன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட போவெல் 2 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அக்சர் பட்டேல் தனியாக நின்று 20 பந்துகளில் 17 ரன்கள் சேர்த்தார். இதனால் டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. ஆர்ஷ்தீப், லிவிங்ஸ்டோன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பஞ்சாப் தடுமாற்றம்

பஞ்சாப் தடுமாற்றம்

160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியில் பாரிஸ்டோ, 15 பந்துகளில் 28 ரன்கள் விளாசினார். ஷிகர் தவான் 16 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். ராஜபக்சே 4 ரன்களிலும், லிவிங்ஸ்டோன் 3 ரன்களிலும், மாயங் அகர்வால் டக் அவுட்டாகியும் அடுத்தடுத்து வெளியேற, பஞ்சாப் அணி 82 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்களை இழந்தது.

டெல்லி வெற்றி

டெல்லி வெற்றி

இதனையடுத்து ஜித்தேஷ் சர்மா தனி ஆளாக நின்று போராடினார். ஜித்தேஷ் சர்மா 34 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் பிறகு ராகுல் சாஹர் போராடினாலும், பஞ்சாப் அணியால் 20 ஓவர் முடிவில் 142 ரன்கள் எடுத்து 9 விக்கெட்களை இழந்து தோல்வியை தழுவியது. இதன் மூலம் பஞ்சாப் அணியின் பிளே ஆப் வாய்ப்பு சிக்கலானது.

Story first published: Tuesday, May 17, 2022, 9:39 [IST]
Other articles published on May 17, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+