மும்பை: ஐபிஎல் 15வது சீசனில் கொரோனா பாதிப்பையும் மீறி டெல்லி அணி, பஞ்சாப் அணியை எதிர்கொண்டது.
டாஸ் வென்ற ரிஷப் பண்ட் பந்துவீசுவதாக அறிவித்தார். எனக்கு பயம் இல்ல, அதுக்கு இது தான் சாம்பிள் என்பது போல் பஞ்ச் வசனமும் பேசினார்.
டெல்லி அணியில் சர்பிராஸ் கான் சேர்க்கப்பட்டார். காயத்திலிருந்து குணமடைந்த பஞ்சாப் அணி கேப்டன் மாயங் அகர்வால் அணிக்கு திரும்பினார்.
தொடக்கம் முதலே டெல்லி அணி வீரர்கள் கட்டுக்கோப்பாக பந்துவீசி ரன்களை கட்டுப்படுத்தினர். இதனால் நெருக்கடி ஏற்பட ஷிகர் தவான் 9 ரன்களில் லலித் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழக்க , அதிரயாக விளையாட முற்பட்டு கேப்டன் அக்ர்வாலும் 15 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.

பாரிஸ்டோ 9 ரன்களில் கலில் அகமது பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினர். அதிரடி வீரர் லிவிங்ஸ்டோன் 2 ரன்களில் அக்சர் பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்து தடுமாறியது. அணியை காப்பாற்ற ஜித்தேஷ் சர்மா தனி ஆளாக போராடி 32 ரன்கள் எடுக்க, ஷாரூக்கான் வெறும் 12 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.
மற்ற வீரர்களும் வந்த வேகத்தில் ஆட்டமிழக்க, 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த 115 ரன்களை மட்டுமே சேர்த்தது. டெல்லி அணி பந்துவீச்சு தரப்பில் குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல், லலித் யாதவ், கலில் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.