Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கொல்கத்தாவை பழிதீர்த்த குல்தீப் யாதவ்.. ஸ்ரேயாஸ்க்கு வேட்டு வைத்த ரிஷப்.. இனி காட்சிகள் மாறும்

மும்பை: ஐபிஎல் தொடரின் 19வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தாவின் அடுத்தடுத்து வெற்றியை டெல்லி அணி தடுத்து நிறுத்தியது. மும்பை பார்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீசியது.

இதனையடுத்து டெல்லி அணியின் தொடக்க வீரராக வார்னர், பிரித்வி ஷா களமிறங்கினர்.

பிரித்வி ஷா தன்னுடைய அதிரடி ஃபார்மை தொடர்ந்தார். நடப்பு சீசனில் பெரும்பாலும் முதல் ஓவரிலே விக்கெட்டை எடுக்கும் கொல்கத்தா அணியின் உமேஷ் யாதவ்க்கு , சிம்ம சொப்பனமாக விளங்கினார் பிரித்வி ஷா.

பலே பேட்டிங்

பலே பேட்டிங்

முதல் பந்திலேயே பவுண்டரி என அதிரடியை காட்ட தொடங்கினார் ஷா. மறுமுனையில் வார்னரும் ஒரே ஓவரில் 2 பவுண்டரி விரட்டினார். இதனையடுத்து. சக நாட்டு வீரரான பாட் கம்மின்ஸையும் டேவிட் வார்னர் விட்டு வைக்கவில்லை. 2 பவுண்டரி, ஒரு சிக்சர் என விரட்ட, அந்த ஓவரில் 16 ரன்கள் சென்றது. இதன் மூலம் 4 ஓவர் முடிவிலேயே டெல்லி அணி 50 ரன்களை எட்டியது. தொடர்ந்து அதிரடி காட்டிய பிரித்வி ஷா 29 பந்துகளில் 51 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

இமாலய இலக்கு

இமாலய இலக்கு

அதன் பின்னர் களமிறங்கிய கேப்டன் ரிஷப் பண்டும் தனது அதிரடியை காட்டினார். வார்னர் 45 பந்துகளில் 61 ரன்களும், ரிஷப் பண்ட் 14 பந்துகளில் 27 ரன்களும் விளாச டெல்லி அணி 13 ஓவரில் 150 ரன்கள் எடுத்தது. சுனில் நரைன் கட்டுக்கோப்பாக பந்துவீசி அடுத்தடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். எனினும் அக்சர் பட்டேல், சர்துல் தாக்கூர் ஜோடி கடைசி 3 ஓவரில் 48 ரன்களை சேர்த்தது. இதனால் 20 ஓவர் முடிவில் டெல்லி அணி 5 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்தது.

 சொதப்பிய கேகேஆர்

சொதப்பிய கேகேஆர்

216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணியில் ரஹானே 3 முறை லைஃப் கிடைத்தும், அவர் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். வெங்கடேஷ் ஐயர் 8 பந்துகளில் 18 ரன்கள் அடித்து பெவிலியன் திரும்பினார். நிதிஷ் ரானா 30 ரன்கள் எடுக்க, சிறப்பாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம் கடந்து முக்கிய கட்டத்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

டெல்லி அபாரம்

டெல்லி அபாரம்

எனினும் கடந்த போட்டியில் போல் ரஸில் அல்லது பாட் கம்மின்ஸ் காப்பாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட போது, அவர்கள் இருவரும் இம்முறை ஏமாற்றினர். மற்ற வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க கொல்கத்தா அணி 171 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 44 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற டெல்லி அணி, தனது 2வது வெற்றியை பதிவு செய்தது. குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி தன்னை வாட்டர் பாயாக பயன்படுத்திய கேகேஆர் அணியை பழிவாங்கினார்.

Story first published: Sunday, April 10, 2022, 19:57 [IST]
Other articles published on Apr 10, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+