Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

13 ஓவரில் டெல்லி 150 ரன்கள்.. ஒரே ஸ்பெல்லில் தலைகீழ் மாற்றிய நரைன்.. இறுதியில் மீண்டும் ட்விஸ்ட்

மும்பை: ஐபிஎல் தொடரின் 19வது லீக் ஆட்டத்தில் டெல்லி அணியும், கொல்கத்தா அணியும் பலப்பரீட்சை நடத்தியது. மும்பை பார்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீசியது.

இதனையடுத்து டெல்லி அணியின் தொடக்க வீரராக வார்னர், பிரித்வி ஷா களமிறங்கியது. வார்னர் முதல் ஆட்டத்தில் சொதப்பினார்.

இதனால் இம்முறை அதிரடியாக ஆட வேண்டும் என்ற உத்வேகத்துடன் அவர் களமிறங்கினார். பிரித்வி ஷா தன்னுடைய அதிரடி ஃபார்மை தொடர்ந்தார்.

அதிரடி தொடக்கம்

அதிரடி தொடக்கம்

நடப்பு சீசனில் பெரும்பாலும் முதல் ஓவரிலேயே விக்கெட்டை எடுக்கும் கொல்கத்தா அணியின் உமேஷ் யாதவ்க்கு , சிம்ம சொப்பனமாக விளங்கினார் பிரித்வி ஷா. முதல் பந்திலேயே பவுண்டரி என அதிரடியை காட்ட தொடங்கினார் ஷா. மறுமுனையில் வார்னரும் ஒரே ஓவரில் 2 பவுண்டரி விரட்டினார். இதனையடுத்து கம்மின்ஸை பந்துவீச ஸ்ரேயாஸ் அழைத்தார்.

4 ஓவரில் 50

4 ஓவரில் 50

சக நாட்டு வீரரான பாட் கம்மின்ஸையும் டேவிட் வார்னர் விட்டு வைக்கவில்லை. 2 பவுண்டரி, ஒரு சிக்சர் என விரட்ட, அந்த ஓவரில் 16 ரன்கள் சென்றது. இதன் மூலம் 4 ஓவர் முடிவிலேயே டெல்லி அணி 50 ரன்களை எட்டியது. தொடர்ந்து அதிரடி காட்டிய பிரித்வி ஷா 29 பந்துகளில் 51 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அதன் பின்னர் களமிறங்கிய கேப்டன் ரிஷப் பண்டும் தனது அதிரடியை காட்டினார்.

13 ஓவரில் 150

13 ஓவரில் 150

இதனால் டெல்லி அணி 10வது ஓவரிலேயே 100 ரன்களை எட்டியது. இதன் பின்னர் வார்னர் 45 பந்துகளில் 61 ரன்களும், ரிஷப் பண்ட் 14 பந்துகளில் 27 ரன்களும் விளாச அடுத்த 3.2 ஓவரில் எடல்லி அணி மேலும் 50 ரன்களை சேர்த்தது. 13 ஓவரில் 150 ரன்கள் என்றால் டெல்லி அணி 240 அடித்துவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

இறுதியில் ட்விஸ்ட்

இறுதியில் ட்விஸ்ட்

ஆனால் சுனில் நரைன் கட்டுக்கோப்பாக பந்துவீசி ரன்களை கட்டுப்படுத்தியதோடு அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் டெல்லி அணியின் ஸ்கோர் கடுமையாக சரிந்தது. எனினும் கடைசியில் ஜோடி சேர்ந்த அக்சர் பட்டேல், சர்துல் தாக்கூர் அதிரடியை காட்டி மீண்டும் ட்விஸ்ட் வைத்தனர். இதனால் கடைசி 3 ஓவரில் 48 ரன்கள் சேர்த்தது. இதனால் 20 ஓவர் முடிவில் டெல்லி அணி 5 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்துள்ளது.

Story first published: Sunday, April 10, 2022, 17:51 [IST]
Other articles published on Apr 10, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+