Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரு போட்டியில் பங்கேற்க தடை.. ரிஷப் பண்ட் உட்பட பலர் மீது நடவடிக்கை.. ஐசிசி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மும்பை: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக பலர் மீதும் ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது.

ஐபிஎல் 34வது லீக் போட்டியில் நேற்று ராஜஸ்தான் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதியது.

இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எனினும் ஒரே ஒரு பந்து இந்த ஆட்டத்தின் முடிவையே மாற்றி அமைத்தது.

கடைசி நேர பரபரப்பு

கடைசி நேர பரபரப்பு

223 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணிக்கு கடைசி 3 பந்துகளில் 36 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ரோவ்மென் போவெல் முதல் மூன்று பந்துகளில் 3 சிக்ஸர்களை விளாசினார். ஆனால் 3வது பந்து ஃபுல்டாசாக வந்தது. இதற்கு போவெல் நோ பால் கொடுக்குமாறு முறையிட்டும், அம்பயர் நிதின் மேனன் மறுப்பு தெரிவித்துவிட்டார். 3வது நடுவருக்கு கூட முறையிடவில்லை.

பண்ட்-ன் அதிரடி நடவடிக்கை

பண்ட்-ன் அதிரடி நடவடிக்கை

இதனால் கடும் ஆத்திரமடைந்த டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் டக் அவுட்டில் இருந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அணியின் துணை பயிற்சியாளர் பிரவீன் ஆம்ரே களத்திற்குள் நேரடியாக வந்து அம்பயர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் பண்ட் வீரர்களை விளையாடாமல் மீண்டு வருமாறும் கூறினார். இதனால் மைதானத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பிசிசிஐ-ன் நடவடிக்கை

பிசிசிஐ-ன் நடவடிக்கை

இந்நிலையில் இதற்கு பிசிசிஐ கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. அவர்கள் மூவருமே ஐபிஎல் 2வது நிலை குற்றத்தை ஒப்புக்கொண்டனர். எனவே கேப்டன் ரிஷப் பண்ட்-க்கு போட்டிக்கான ஊதியம் முழுவதும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. சக வீரர் ஷர்துல் தாக்கூருக்கு போட்டிக்கான ஊதியத்தில் 50% சதவீதத்தை அபராதமாக விதித்துள்ளது.

ஒரு போட்டியில் தடை

ஒரு போட்டியில் தடை

துணை பயிற்சியாளர் பிரவீன் ஆம்ரேவுக்கு ஒருபடி மேல் சென்றுள்ளனர். அவருக்கு போட்டி ஊதியத்தின் 100% தொகையையும் அபராதமாக விதித்தது மட்டுமின்றி அடுத்த ஒரு போட்டியில் அவர் பங்கேற்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர். மேலும் நடுவர்களுக்கு எதிராக சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

Story first published: Saturday, April 23, 2022, 12:57 [IST]
Other articles published on Apr 23, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+