Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஹோட்டலில் அறை கதவுகள் மூடி இருக்க கூடாது.. டெல்லி வீரர்களுக்கு ரிக்கி பாண்டிங் உத்தரவு.. காரணம் என்ன

மும்பை: ஐபிஎல் 15வது சீசன் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பல்வேறு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Recommended Video

Delhi Capitals Coach Ricky Ponting-ன் inspirational speech | OneIndia Tamil

இந்த நிலையில், டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் அணி வீரர்களுடன் பேசிய காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பயிற்சியாளர் என்றால் இப்படி தான் இருக்கனும் என்று மற்றவர்களுக்கு தனது செயல் மூலம் முன்மாதிரியாக விளங்கினார் ரிக்கி பாண்டிங்.

குடும்பம்

குடும்பம்

ரிக்கி பாண்டிங் தனது அணி வீரர்களிடம் , பல புதிய முகங்களை இங்கு நான் பார்க்கிறேன். நீங்கள் சிறந்த வீரர்கள் என்பதால் தான் டெல்லி அணியில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். முதலில் இது அணி என்பதை மறந்து விடுங்கள். இது உங்கள் குடும்பம். அடுத்த 2 மாதத்திற்கு அனைவரும் ஒன்றாக தான் இருக்க போகிறோம். ஒருவரை ஒருவர் பேசி நன்கு புரிந்து கொள்ளுங்கள்.

கண்டிஷன்

கண்டிஷன்

ஹோட்டலில் யாருடைய அறையின் கதவுகளும் மூடி இருக்க கூடாது திறந்தே இருக்க வேண்டும். அப்போது தான் மற்ற வீரர்கள் உங்கள் அறைக்கு வந்து பேச ஏதுவாக இருக்கும். நான் பயிற்சியாளர் என்பதை மறந்து விடுங்கள், நான் உங்களுடைய நண்பன் என்று நினைத்து கொள்ளுங்கள். உங்களுக்கு கிரிக்கெட் குறித்து என்ன சந்தேகம் இருந்தாலும் என்னுடன் வந்து பேசுங்கள். அது தான் எனது பணி.

உதவுங்கள்

உதவுங்கள்

இங்கு நான் டெல்லி அணியின் கேப்டன், சர்வதேச வீரர்கள், வெளிநாட்டு வீரர்கள், தண்ணீர் பாட்டில் தூக்கி கொண்டு வரும் வீரர் என அனைவரையும் ஒரே மாதிரி தான் பார்ப்பேன், அணுகுவேன், நீங்களும் அப்படி தான் இருக்க வேண்டும். சீனியர்கள் உங்கள் பயிற்சியை முடித்துவிட்டால், ஜீனியர் வீரர்களுக்கு உதவுங்கள்.

100 சதவீதம்

100 சதவீதம்

பயிற்சியின் போது 100 சதவீதத்தை கொடுங்கள். 100 சதவீத முயற்சியுடன் ஒரு காரியத்தை செய்தால் நிச்சயம் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். எனக்கு ஒரு விஷயம் மட்டும் பிடிக்காது. வீரர்கள் தங்களது நேரத்தையும், திறமையும் வீணடிப்பது சுத்தமாக பிடிக்காது. கிரிக்கெட் விஷயத்தில் நான் கொஞ்சம் சிரீயஸ் ஆனவர் மற்ற நேரத்தில் ஜாலியாக தான் இருப்பேன். குடும்பமாக செயல்பட்டால் நிச்சயம் இம்முறை நாம் கோப்பையை வெல்வோம் என்று பேசினார்.

Story first published: Wednesday, March 23, 2022, 18:57 [IST]
Other articles published on Mar 23, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+