Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னடா இது சோதனை.. பண்ட்-ஐ அனாதை ஆக்கிய 5 வீரர்கள்.. மும்பை அணியிடம் சரணடையுமா டெல்லி கேப்பிடல்ஸ் !

மும்பை: ஐபிஎல் தொடரின் 2வது போட்டியில் இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.

Recommended Video

MI vs DC :பாவம் Rishabh Pant! வீரர்கள் பஞ்சத்தில் Delhi Capitals | Oneindia Tamil

குரூப் பி பிரிவு போட்டியான இது மும்பை பிராபோர்ன் மைதானத்தில் மதியம் 3.30 மணிக்கு தொடங்கவுள்ளது.

கடந்த சீசனில் அடுத்தடுத்து வெற்றிகளை குவித்த டெல்லி அணி ப்ளே ஆஃப் சுற்றுடன் வெளியேறியது. எனவே இந்த முறை வெற்றியுடன் தொடங்க காத்துள்ளது. ஆனால் பண்ட்-க்கு அது சாதாரண காரியம் அல்ல.

பண்ட்-க்கு சோகம்

பண்ட்-க்கு சோகம்

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தூணாக கடந்த சீசன்களில் ரபாடா, ஹெட்மயர் என அயல்நாட்டு வீரர்கள் தான் இருந்தனர். ஆனால் இந்தாண்டு அணியில் உள்ள 7 அயல்நாட்டு வீரர்களில் 5 பேர் முதல் போட்டியில் பங்கேற்கவில்லை. டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ் ஆகியோர் சர்வதேச தொடர்களில் உள்ளனர். முஸ்திவிசூர் ரஹ்மான், லுங்கி இங்கிடி குவாரண்டைனிலும், ஆன்ரிக் நார்ட்ஜே காயத்திலும் உள்ளனர்.

ப்ளேயிங் 11 என்ன

ப்ளேயிங் 11 என்ன

இவர்கள் இன்றி புதிய ப்ளேயிங் 11 உடன் தான் பண்ட் களமிறங்குகிறார். ஓப்பனிங்கை பொறுத்தவரையில் வார்னர் இல்லாததால் பிரித்வி ஷாவுடன் டிம் செய்ஃபெர்ட் விளையாடலாம். நியூசிலாந்து அணியில் லோயர் மிடில் ஆர்டரில் விளையாடுபவர் என்றாலும் சில போட்டிகளில் ஓப்பனராக கலக்கியுள்ளார். இவரை விட்டால் அனுபவ ஓப்பனரும் டெல்லிக்கு இல்லை.

கேப்டனின் பொறுப்பு

கேப்டனின் பொறுப்பு

முதல் விக்கெட்டிற்கு கே.எஸ்.பரத் இருக்கிறார். கடந்த சீசனில் ஆர்சிபி அணிக்காகவும் 3வது வீரராக விளையாடிய பரத் சிறப்பான பங்களிப்பை தந்தார். இதனால் இந்த முறை நம்பிக்கை வைக்கப்பட்டுள்ளது. 4வது வீரராக கேப்டன் ரிஷப் பண்ட் களமிறங்குகிறார். பண்ட்-ம் தற்போது நல்ல ஃபார்மில் இருப்பதால் மிடில் ஆர்டரில் அணியை தாங்கி பிடிக்கலாம்.

ஃபினிஷர் யார்?

ஃபினிஷர் யார்?

ஃபினிஷர் பணிக்காக வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரோவ்மன் போவெல் வந்திருக்கிறார். கடந்த சீசனில் ஹெட்மெயர் செய்த பணியை இவர் செய்யவுள்ளார். இவரை தொடர்ந்து ஆல்ரவுண்டர் லலித் யாதவ் வாய்ப்பு பெறலாம். பேட்டிங்கில் நல்ல ஃபார்மில் இருக்கும் இவர் 3வது ஸ்பின்னராகவும் உதவலாம்.

பவுலிங் படை

பவுலிங் படை

டெல்லி அணியின் லோயர் ஆர்டரை காப்பாற்ற ஷர்துல் தாக்கூர் இருக்கிறார். சிஎஸ்கே அணிக்காக கடந்த சீசனில் கலக்கிய ஷர்துல் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். முதன்மை வேகப்பந்துவீச்சாளர்களாக கலீல் அகமது மற்றும் சேட்டன் சக்காரியா விளையாடவிருக்கின்றனர்.

சுழற்பந்துவீச்சு

சுழற்பந்துவீச்சு

சுழற்பந்துவீச்சை பொறுத்தவரையில் அனுபவ வீரர்களான குல்தீப் யாதவ் மற்றும் அக்‌ஷர் பட்டேல் ஆகியோர் களம் காணுகின்றனர். தற்போதைக்கு டெல்லி அணியின் மிகப்பெரிய பலமாக இவர்கள் இருவரும் தான் பார்க்கப்படுகின்றனர். பிராபோர்ன் மைதானம் சுழற்பந்துவீச்சுக்கும் சற்று உதவலாம் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ப்ளேயிங் 11 கணிப்பு

ப்ளேயிங் 11 கணிப்பு

டிம் செய்ஃபெர்ட், பிரித்வி ஷா, ரிஷப் பண்ட், சர்ஃபராஸ் கான், மந்தீப் சிங், ரோவ்மேன் போவெல், அக்‌ஷர் பட்டேல், ஷர்துல் தாக்கூர், சேட்டன் சக்காரியா, கலீல் அகமது, குல்தீப் யாதவ்

Story first published: Sunday, March 27, 2022, 15:07 [IST]
Other articles published on Mar 27, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+