Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வாழ்வா? சாவா? கட்டத்தில் டெல்லி அணி.. 2 முக்கிய மாற்றங்களை செய்த பண்ட்.. ராஜஸ்தான் அணியை வெல்லுமா??

மும்பை: ப்ளே ஆஃப் சுற்றுக்கான கடைசி வாய்ப்பில் வெற்றி பெறுவதற்காக டெல்லி கேப்பிடல்ஸ் அணி இன்று மோதுகிறது.

ஐபிஎல் தொடரின் 58வது லீக் போட்டியில் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள டெல்லி அணி கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

ராஜஸ்தானின் கனவு

ராஜஸ்தானின் கனவு

ராஜஸ்தான் ராயல்ஸ் இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 7 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றுவிட்டால் கிட்டத்தட்ட ப்ளே ஆஃப் சுற்றை இறுதி செய்துவிடும். இதே போல புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திற்கும் முன்னேறிவிடும். இதற்காக அணியில் ஒரே ஒரு மாற்றத்தை செய்துள்ளனர். ஹெட்மெயருக்கு குழந்தை பிறந்துள்ளதால், அவருக்கு மாற்றாக வாண்டர் டூசன் சேர்க்கப்பட்டுள்ளார்.

சிக்கலில் டெல்லி அணி

சிக்கலில் டெல்லி அணி

இதே போல டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு இன்று வாழ்வா சாவா போட்டியாகும். இதுவரை 11 போட்டிகளில் ஆடியுள்ள அந்த அணி 5 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. எனவே இனி ஒரு தோல்வியடைந்தால் கூட் ப்ளே ஆஃப் ரேஸில் இருந்து வெளியேறும் அபாயம் உள்ளது. இதனால் 2 முக்கிய மாற்றங்களை ரிஷப் பண்ட் செய்துள்ளார்.

2 முக்கிய மாற்றங்கள்

2 முக்கிய மாற்றங்கள்

பேட்ஸ்மேன் ரிப்பல் பட்டேலுக்கு பதிலாக மீண்டும் லலித் யாதவ் அணிக்குள் சேர்க்கப்பட்டுள்ளார். இதே போல வேகப்பந்துவீச்சாளர் கலீல் அகமது-க்கு பதிலாக சேட்டன் சக்காரியா சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த போட்டியில் மோசமான தோல்வியை பெற்ற டெல்லி அணி இன்று கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 ப்ளேயிங் 11 விவரம்

ப்ளேயிங் 11 விவரம்

ராஜஸ்தான்: யஷஸ்வி ஜெய்ஷ்வால், ஜாஸ் பட்லர், சஞ்சு சாம்சன், தேவ்தத் பட்டிக்கல், ராசி வாண்டர் டுசன், ரியான் பராக், ரவி அஸ்வின், ட்ரெண்ட் போல்ட், பிரஷித் கிருஷ்ணா, யுவேந்திர சாஹல், குல்தீப் சென்

டெல்லி அணி : டேவிட் வார்னர், ஸ்ரீகர் பரத், மிட்செல் மார்ஷ், ரிஷப் பண்ட், லலித் யாதவ், ரோவ்மென் போவெல், அக்‌ஷர் பட்டேல், ஷர்துல் தாக்கூர், சேட்டன் சக்காரியா, குல்தீப் யாதவ், ஆன்ரிக் நார்ட்ஜே

Story first published: Wednesday, May 11, 2022, 23:07 [IST]
Other articles published on May 11, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+