Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டெல்லி கேப்பிடல்ஸ் வீரருக்கு கொரோனா.. அதிரடி வீரருக்கு உறுதியானது.. ஒட்டுமொத்த அணியும் குவாரண்டைன்!

மும்பை: டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் 2வது நபருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Recommended Video

IPL 2022: Delhi Capitals hit by Covid-19 outbreak; squad under isolation | OneIndia Tamil

ஐபிஎல் 15வது சீசன் கிரிக்கெட் தொடர் கடந்த 4 வாரங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு அணியும் தலா 5 போட்டிகளை விளையாடி முடித்துள்ள நிலையில் கடந்த சில நாட்களாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன.

கொரோனா

கொரோனா

மும்பை ஹோட்டல் அறையில் வழக்கம் போல செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில், அணியின் பிசியோதெரபிஸ்ட் பாட்ரிக் ஃபர்ஹார்ட்டிற்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. அறிகுறிகள் இன்றி தொற்று பாதிப்பு இருந்ததால், 7 நாட்களுக்கு உடனடியாக குவாரண்டைன் செய்யப்பட்டார்.

வீரர்கள் நிலை

வீரர்கள் நிலை

டெல்லி அணி வீரர்களும் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டனர். எனினும் இறுதியில் அவர்களுக்கு எந்தவித பாதிப்புகளும் இல்லை என கூறி ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் விளையாட அனுமதிக்கப்பட்டனர். ரசிகர்களும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

புதிதாக ஒருவருக்கு உறுதி

புதிதாக ஒருவருக்கு உறுதி

இந்நிலையில் வீரர் ஒருவருக்கே கொரோனா உறுதிசெய்யப்பட்டது. அணியில் இன்று எடுக்கப்பட்ட ராபிட் ஆண்டிஜன் சோதனையில் வீரர் ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டது. மேலும் அவருக்கு நல்ல அறிகுறிகள் தென்பட்டுள்ளது. இதனையடுத்து அணியின் அனைத்து வீரர்களுமே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் பயிற்சிகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.

வீரரின் விவரம்

வீரரின் விவரம்

ஆஸ்திரேலியாவில் இருந்து சமீபத்தில் வந்த மிட்ஷல் மார்ஷுக்கு தான் தொற்று உள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆர்சிபி அணி இதுவரை 5 போட்டிகளில் 2 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. அடுத்ததாக வரும் 20ம் தேதியன்று பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடவுள்ளது. இதற்காக இன்னும் புனேவுக்கு கூட புறப்படாமல் டெல்லி வீரர்கள் உள்ளனர்.

Story first published: Monday, April 18, 2022, 15:12 [IST]
Other articles published on Apr 18, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+