டெல்லி அணியில் கொரோனா.. பரிசோதனைகள் முடிவுகள் வெளியானது.. போட்டி நடைபெறுமா?
மும்பை: டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் கொரோனா நுழைந்த நிலையில் அதுகுறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் தொடர் கடந்த 3 வாரங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மும்பை மற்றும் புனே நகரங்களில் மட்டுமே நடைபெறுவதால் கொரோனா அச்சுறுத்தலும் இல்லாமல் இருந்தது.
ஆனால் நேற்று திடீரென டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்குள் கொரோனா நுழைந்துவிட்டதாக தகவல் வெளியானது.

கொரோனா உறுதி
ஹோட்டல் அறையில் வழக்கம் போல செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில், அணியின் பிசியோதெரபிஸ்ட் பாட்ரிக் ஃபர்ஹார்ட்டிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. எந்தவித அறிகுறிகளும் இன்றி உறுதியானது. இதனையடுத்து அவர் 7 நாட்களுக்கு குவாரண்டைன் படுத்தப்பட்டுள்ளார்.

வீரர்கள் குவாரண்டைன்
இதே போல அணியின் அனைத்து வீரர்களும், பயிற்சியாளர்களும் உடனடியாக குவராண்டைன் செய்யப்பட்டு, பரிசோதனைகள் நடத்தப்பட்டது. இன்று டெல்லி vs ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெறுகிறது. வீரர்களின் முடிவை பொறுத்து தான் இன்றைய போட்டி குறித்து முடிவெடுக்கப்படும் எனத்தெறிகிறது.

வீரர்களின் நிலைமை
இந்நிலையில் ரசிகர்கள் எதிர்பாத்திருந்த முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில் பிசியோதெரபிஸ்ட்-க்கு மட்டும் தான் உறுதியாகியுள்ளது, மற்ற வீரர்கள் அனைவருக்கும் கொரோனா உறுதியாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனிமைப்படுத்திப்பட்டிருந்த வீரர்கள் அனைவருமே பயிற்சிகாக வெளியில் அனுப்பப்பட்டனர்.

ரசிகர்களின் அச்சம்
கொரோனா பிரச்சினையால் தான் கடந்த சீசன் பெரும் பிரச்சினைகள் ஏற்பட்டது. தற்போது பல பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்த போதும், மீண்டும் கொரோனா பிரச்சினை எழுந்துள்ளது. இனி பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்குமா என்ற அச்சமும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications