அடப்பாவமே.. வீரர்கள் பஞ்சத்தில் டெல்லி அணி.. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத கொடுமை.. பாவம் ரிஷப் பண்ட்!
மும்பை: ஐபிஎல் வரலாற்றில் 10 ஆண்டுகளுக்கு பிறகு யாருக்கும் ஏற்படக் கூடாத பரிதாப நிலை டெல்லி அணிக்கு ஏற்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரின் 2வது லீக் போட்டியில் இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதி வருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார். டாஸ் அவரின் பக்கம் சாதகமாக இருந்தாலும் ப்ளேயிங் 11 சாதகமாக இல்லை.

டெல்லி அணியில் பஞ்சம்
டெல்லி கேப்பிடல்ஸ் அணி கடந்த சில ஆண்டுகளாக வெற்றிகரமாக இருக்க அயல்நாட்டு வீரர்கள் முக்கிய காரணமாக இருந்தனர். கடந்த சீசனில் கூட ககிஸ்கோ ரபாடா, ஆன்ரிக் நார்ட்ஜே, சிம்ரான் ஹெய்மெயர் போன்றோர் அணியின் தூணாக இருந்தனர். ஆனால் இந்த சீசனில் அந்த அணி ஏலம் எடுத்த 7 அயல்நாட்டு வீரர்களில் 5 பேர் முதல் போட்டியில் விளையாடவில்லை. மீதமுள்ள 2 பேரை வேறு வழியின்றி ஆட வைத்துள்ளனர்.

பேட்ஸ்மேன்கள் இல்லை
ஓப்பனிங் வீரரான டேவிட் வார்னர் மற்றும் ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் ஆகியோர் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் பங்கேற்றுள்ளனர். அடுத்த மாதம் தான் அவர்கள் கிளம்புவார்கள் என்பதால் டெல்லி அணியின் முதல் 5 போட்டிகளில் இருக்க மாட்டார்கள். இது பேட்டிங்கில் பெரும் அடியாக உள்ளது.

பவுலிங்கில் 3 பேர்
பந்துவீச்சை பொறுத்தவரையில் வங்கதேச வீரர் முஸ்திவிசூர் ரஹ்மான் மற்றும் தென்னாப்பிரிக்க வீரர் லுங்கி இங்கிடி ஆகியோர் சர்வதேச கடமையை கூட விட்டு, இந்தியா வந்தனர். எனினும் தாமதமாக வந்ததால் குவாரண்டைனில் உள்ளனர். டெல்லி அணியின் நம்பிக்கை நாயகனான ஆண்ரிக் நார்ட்ஜே கையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஓய்வில் இருக்கிறார்.
Recommended Video

ஐபிஎல் வரலாறு
இப்படி 5 முக்கிய வீரர்கள் இல்லாததால், மீதமுள்ள டிம் செய்ஃபெர்ட் மற்றும் ரோவ்மென் போவலை மட்டும் வைத்து டெல்லி ஆடுகிறது. ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணி 2 அயல்நாட்டு வீரர்களுடன் மட்டும் ஆடுவது கடந்த 10 ஆண்டுகளில் நடைபெற்றதே இல்லை. கடைசியாக 2011ம் ஆண்டு சென்னை அணிக்கு எதிராக கொல்கத்தா அணி ஜேக் காலிஸ் மற்றும் மோர்கனை மட்டும் வைத்து விளையாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications