Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல்- டெல்லி அணிக்குள் வந்த வங்கதேச புயல்.. ராசியான மைதானத்தில் ரிஷப் பண்ட்

புனே: ஐபிஎல் 10வது லீக் ஆட்டத்தில் டெல்லி அணியும், குஜராத் அணியும் பலப்பரிட்சை நடத்துகிறது. இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் விளையாடி வெற்றி பெற்றுள்ளது.

டெல்லி அணியில் பேட்டிங் பலமாக இருந்தாலும், முதல் ஆட்டத்தில் நட்சத்திர வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். எனினும் லலித் யாதவ், அக்சர் பட்டேல் ஆகியோர் பொறுப்புடன் விளையாடி வெற்றியை தேடி தந்தனர்.

இதனால் இன்றைய ஆட்டத்தில் டெல்லி அணியின் பேட்டிங் கிளிக் ஆக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

ஆடுகளம்

ஆடுகளம்

குஜராத் அணியை பொறுத்தவரை முகமது ஷமி, லோகி பெகுர்சன், ரசித் கான், வருண் ஆரேன் ஆகிய சிறந்த பந்துவீச்சாளர்கள் உள்ளனர். இதனால் இந்த பந்துவீச்சை எதிர்கொள்வது டெல்லி அணி வீரர்களுக்கு கொஞ்சம் சிரமமாக இருக்கலாம். புனே மைதானமும் இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிக்கு தான் சாதகமாக இருக்கும்.

வங்கதேச வேகம்

வங்கதேச வேகம்

இதனால் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. டெல்லி அணியில் பலமான முஸ்தபிஜர் ரஹ்மான் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு கமலேஷ் நாகர்கோட்டி வழிவிட்டுள்ளார். ஆனால் குஜராத் அணியில் எவ்வித மாற்றமும் செய்யவில்லை.

ராசியான மைதானம்

ராசியான மைதானம்

குஜராத் அணியின் மேத்தீவ் வெட், டேவிட் மில்லர் போன்ற வீரர்கள் இடதுகை சுழற்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள திணறுவார்கள் என்பதால், அவர்களை அக்சர் பட்டேல் வைத்து ரிஷப் பண்ட் நெருக்கடி தரலாம். ரிஷப் பண்ட் கடைசியாக புனேவில் விளையாடிய 5 போட்டியில் மூன்றில் அரைசதம் விளாசியுள்ளார். இதனால் இன்று ரிஷப் பண்ட் ஸ்பெசல் இன்று இருக்கலாம்.

பிளேயிங் லெவன்

பிளேயிங் லெவன்

குஜராத் அணி 1, சுப்மான் கில், 2. மேத்தீவ் வெட், 3, விஜய் சங்கர், 4,அபினவ் மனோகர், 5, ஹர்திக் பாண்டியா, 6,டேவிட் மில்லர், 7, ராகுல் திவேட்டியா, 8,ரஷித் கான், 9, வருண் ஆரோன், 10, லோகி பெகுர்சன், 11, முகமது ஷமி

டெல்லி அணி, 1, பிரித்வி ஷா, 2, டிம் செஃபர்ட், 3, மந்தீப் சிங், 4, ரிஷப் பண்ட், 5, போவெல், 6, லலித் யாதவ், 7, அக்சர் பட்டேல், 8, ஷர்துல் தாக்கூர், 9, குல்தீப் யாதவ் 10, கலில் அகமது, 11, முஸ்தபிசுர் ரஹ்மான்

Story first published: Saturday, April 2, 2022, 19:51 [IST]
Other articles published on Apr 2, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+