Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனியை ஓரங்கட்டிய ரிஷப் பண்ட்.. ஒரே கேட்சில் ஆட்டத்தை மாற்றிய பண்ட்.. களத்தில் கில்லி மாதிரி அசத்தல்

மும்பை: ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ரிஷப் பண்டின் விக்கெட் கீப்பிங் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

41வது லீக் ஆட்டத்தில் டெல்லி அணியும், கொல்கத்தா அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தியது.

இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தப் போட்டியில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் கொல்கத்தா களமிறங்கியது.

திணறிய கேகேஆர்

திணறிய கேகேஆர்

நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா அணியின் முன்வரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆரோன் பிஞ்ச் 3 ரன்களிலும், வெங்கடேஷ் ஐயர் 6 ரன்களிலும்,. பாபா இந்திரஜித் 6 ரன்களிலும், சுனில் நரைன் டக் அவுட்டாகியும் வெளியேறினர். இதனால் கொல்கத்தா அணி கடுமையாக திணறியது.

ஸ்ரேயாஸ் அபாரம்

ஸ்ரேயாஸ் அபாரம்

இருப்பினும் தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்திய கேபடன் ஸ்ரேயாஸ் ஐயர். டெல்லி அணிக்கு பதிலடி தந்தார். எங்கே தனி ஆளாக, போட்டியை வென்று தந்துவிடுவாரோ என்று டெல்லி அணி வீரர்களே கொஞ்சம் அச்சப்பட்டனர். ஸ்ரேயாஸ் 37 பந்துகளில் 42 ரன்கள் அடித்த நிலையில், ரன் வேகத்தை அதிகப்படுத்தும் முயற்சியில் இறங்கினார்.

ரிஷப் பண்ட் அசத்தல்

ரிஷப் பண்ட் அசத்தல்

அப்போது, டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட், குல்தீப் யாதவை பந்துவீச அழைத்தார். கேட்ச்கள் உங்களுக்கு மேட்ச்களை வென்று தரும் என்று சொல்வார்களே, அப்படி ஒரு சம்பவம் தான் நேற்று நடந்தது. ஸ்ரேயாஸ் ஐயர் அடித்த பந்து, தரையோடு தரையாக சென்ற நிலையில், ரிஷப் பண்ட் அதனை யாரும் எதிர்பாராத வகையில் பிடித்து அசத்தினார்.

ரசிகர்கள் பாராட்டு

ரசிகர்கள் பாராட்டு

இதன் மூலம் ஸ்ரேயாஸ் ஆட்டமிழக்க,ஆட்டத்தில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. ரிஷப் பண்ட்க்கு அனுபவம் வர, வர நல்ல கேப்டனாகவும். விக்கெட் கீப்பரில் கில்லியாகவும் மாறிவிட்டதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இந்த தோல்வி மூலம் கொல்கத்தா அணி 6 புள்ளிகளுடன் 8வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

Story first published: Friday, April 29, 2022, 10:41 [IST]
Other articles published on Apr 29, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+