Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஷர்துல் - ரிஷப் பண்ட்க்குள் களத்தில் ஏற்பட்ட பிரச்சினை..விட்டா அடிச்சிருவாரு போல.. என்ன நடந்தது?

மும்பை: ஐபிஎல் தொடரில் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஷர்துல் தாக்கூரும், ரிஷப் பண்ட்க்கும் களத்திலேயே சண்டை போட்டு கொண்ட சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அடுத்த கேப்டன் என்ற தகுதியில் இருக்கும் நபர் இப்படி நடந்து கொள்ளலாமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஏற்கனவே ஹர்திக் முகமது ஷமியை களத்தில் திட்டிய விவகாரம் நடந்த நிலையில், மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் வீரர்கள் அதிரடி சரவெடியை கொளுத்தினர்.

ரிஷப் டெண்ஷன்

ரிஷப் டெண்ஷன்

குறிப்பாக ஜாஸ் பட்லர் 57 பந்தில் சதம் விளாசினார். படிக்கல் அரைசதமும், இறுதியில் சாம்சன் அதிரடியும் காட்ட ராஜஸ்தான் அணி 2 விக்கெட் இழடபபிற்கு 222 ரன்கள் எடுத்தது. இந்தப் போட்டியில் ரிணப் பண்ட் எடுத்த எந்த முயற்சியும் கைக்கூட வில்லை. இதனால் அவர் தொடக்கம் முதலே டென்ஷனாகவே காணப்பட்டார்.

காரணம் என்ன?

காரணம் என்ன?

அதற்கு காரணம், டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் அவர் மைதானத்திற்கு வரவில்லை. யார் உதவியும் இன்றி பல தடைகளை கடந்து டெல்லி இன்று விளையாடியது. இதனால், களத்தில் நினைத்தது ஏதும் டெல்லிக்கு நடைபெறவில்லை.

குல்தீப்பை திட்டிய ஷர்துல்

குல்தீப்பை திட்டிய ஷர்துல்

குறிப்பாக ஷர்துல் தாக்கூருக்கும், கேப்டன் ரிஷப் பண்ட்க்கும் என்ன சிக்கல் நடந்தது என தெரியவில்லை. அவருக்கு 4 ஓவரை வழங்காமல் வெறும் 3 ஓவர் தான் ரிஷப் பண்ட் வழங்கினார். இந்த நிலையில், 20 ஓவரில்5வது பந்தில், ஷர்துல் வீசிய பந்தை, சாம்சன் அடிக்க, அதனை 30 மீட்டர் வளையத்தில் இருந்த குல்தீப் தடுக்காமல் கோட்டைவிட்டார். இதனால் களத்திலே ஷர்துல் திட்டினார்.

ரிஷப் பண்ட் ரியாக்சன்

ரிஷப் பண்ட் ரியாக்சன்

இதனையடுத்து ஷர்துல் வீசிய கடைசி பந்து சிக்சருக்கு பறந்தது. இதனால் கடுப்பான ரிஷப் பண்ட் ஷர்துல் தாக்கூரை பார்த்து முறைத்தார். இதனையடுத்து, ரிஷப் கோபமாக பெவிலியனுக்கு சென்றார். இருவரும் களத்தில் பேசி கொள்ளவே இல்லை. ஷர்துல், குல்தீப்பை திட்டியதும், பிறகு ஷர்துலை பார்த்து ரிஷப் முறைத்ததும் அந்த அணியில் ஏதோ சரியில்லை என்பதை தெளிவாக காட்டுகிறது.

Story first published: Friday, April 22, 2022, 23:12 [IST]
Other articles published on Apr 22, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+