Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL வரலாற்றில் தோனி புதிய சாதனை.. சச்சின் கூட செய்யல.. தல கொடுத்த கம்பேக்

மும்பை: ஐபிஎல் 15வது சீசனில் கொல்கத்தா அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி அரைசதம் விளாசினார்.

தோனிக்கு தற்போது வயது 40 ஆகிவிட்டது. இதனால் தோனியின் பேட்டிங் பாதிக்கப்பட்டதாக பல விமர்சனங்கள் எழுந்தன.

தோனி கடந்த 2021ஆம் ஆண்டு சீசனில் 16 போட்டியில் விளையாடி 114 ரன்கள் தான் சேர்த்தார்.

காப்பான்

காப்பான்

2020ஆம் ஆண்டு சீசனில் தோனி 200 ரன்கள் மட்டுமே அடித்தார். இந்த நிலையில் தோனி தனது கேப்டன் பதவியை விட்டு விலகி, வெறும் பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பராக களமிறங்கினார்.இன்றைய ஆட்டத்தில் சென்னை அணி 61 ரன்களுக்கு 5 விக்கெட் எடுத்து தடுமாறியது.

அரைசதம்

அரைசதம்

இதனையடுத்து களத்துக்கு வந்த தோனி, தொடக்கத்தில் பொறுமையாக விளையாடினார். அவருக்கு நரைன் நெருக்கடி தர, அப்போது பொருமை காட்டிய தோனி, பின்னர் தனது வழக்கமான அதிரடியை காட்டினார். 1 சிக்சர், 7 பவுண்டரிகளை விளாச தோனி 38 பந்துகளில் 50 ரன்கள் குவித்தார். குறிப்பாக கடைசி 8 பந்தில் தோனி 24 ரன்கள் விளாசினார்.

ஐபிஎல் சாதனை

ஐபிஎல் சாதனை

4,1,4,0,4,1,4 என தோனி அடுத்தடுத்து பறக்கவிட சமூக வலைத்தளத்தில் Thala is Back என்ற வார்த்தை டிரெண்ட் ஆக தொடங்கியது 3 ஆண்டுகளுக்கு பிறகு ஐபிஎல் போட்டியில் தோனி அரைசதம் குவித்தார்.இதன் மூலம் ஐபிஎல் போட்டியில் அரைசதம் விளாசிய வயதான வீரர் என்ற பெருமையை தோனி படைத்தார். தோனியின் இந்த சாதனைக்கு சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.

Recommended Video

CSK vs KKR : MS Dhoni hits fifty as CSK finish with 131/5 | Oneindia Tamil
தோனிக்கு பாராட்டு

தோனிக்கு பாராட்டு

தோனி தொடக்கத்தில் மெதுவாக விளையாடினாலும் தனது அனுபவத்தை கொண்டு சிறப்பாக விளையாடியதாக கூறினார். தோனி தனது காமன்சென்ஸை பயன்படுத்தியதால் தான் சிஎஸ்கேவால் இந்த ரன்களையாவது எட்ட முடிந்தது என்றும் சச்சின் கூறினார். இருப்பினும் தோனியை தவிர வேறு யாரும் சிறப்பாக ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, March 27, 2022, 0:53 [IST]
Other articles published on Mar 27, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+