தமிழ் திரையுலகில் தோனி??.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.. முழு விவரம்!
மும்பை: எம்.எஸ்.தோனி கோலிவுட் திரையுலகில் தடம்பதிக்கவுள்ளதாக தகவல் வெளியாவது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியாகியுள்ளது.
Recommended Video
இந்திய அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனிக்கு தமிழகத்தில் அதிக ரசிகர் பட்டாளம் உள்ளது. இதனால் அவருக்கு 'தல' தோனி என்றும் பெயர் உள்ளது.
நடப்பாண்டில் மீண்டும் சென்னை அணியின் கேப்டனாக பதவியேற்றுள்ள தோனி, ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

தோனியின் திட்டம்
ஆனால் அதற்கு முன்னதாக தோனியின் அடுத்த திட்டம் குறித்து அறிவிப்பு வெளியானது. அதாவது தமிழ் திரைப்படம் ஒன்றை தோனி தயாரிக்கவுள்ளதாக நேற்று தகவல் வெளியானது. தோனி எண்டர்டெயிண்மண்ட் சார்பில் ரஜினியின் உதவியாளராக இருந்த சஞ்சய் என்பவருடன் இணைந்து தோனி இப்படத்தை தயாரிக்க போவதாகவும் கூறப்பட்டது.

கதாநாயகி யார்?
பெரும் பட்ஜெட்டில் உருவாகவுள்ள இப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்காக நயன்தாரா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்பட்டது. சமீபத்தில் விக்னேஷ் சிவன் தோனியை வைத்து விளம்பர படம் இயக்கியிருந்தார். எனவே விக்னேஷ் சிவன் மூலமாக தான் இந்த ஏற்பாடுகள் நடந்திருக்கும் எனவும் தெரிந்தது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இந்நிலையில் இந்த தகவல் குறித்து தோனி எண்டர்டெயிண்மண்ட் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தோனி தற்போது வரை சஞ்சய் என்ற எந்தவொரு நபருடனும் இணைந்து பணிபுரியவில்லை. தமிழில் திரைப்படம் தயாராவதாக வெளியான தகவல்கள் அனைத்தும் பொய்யானது. தோனி எண்டர்டெயிண்ட்மண்ட் மற்ற பணிகளை தான் செய்து வருகிறது எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மற்ற முதலீடு
தோனி ஏற்கனவே விவசாயம், கடக்நாத் எனப்படும் கருங்கோழி பண்னை என முதலீடுகளை செய்து வருகிறார். மற்றொருபுறம் பீர் நிறுவனத்திலும் முதலீடு செய்துள்ளார். ஓய்வுக்கு பிறகு சென்னை அணியின் ஆலோசகர் மற்றும் இந்த விவசாய பணிகளில் மட்டுமே அவர் முழு கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications