Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோகித் மட்டும் ஏமாந்தவரா??.. உனத்கட்டின் மற்றொரு முகம்.. உண்மையை கிளறிய தோனி ரசிகர்கள்!!

மும்பை: ஐபிஎல் தொடரில் சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி ஓவர் வீசிய மும்பை வீரர் உனாட்கட் மீது ரசிகர்கள் கொலைவெறியில் உள்ளனர்.

கடைசி ஓவரில் 17 ரன்களை விட்டு கொடுத்து 6வது தோல்வியை மும்பை அணிக்கு பெற்று தந்துவிட்டாரே என்று ரசிகர்கள் உனாட்கட் மீது கோபத்தில் உள்ளனர்.

இதனால் உனாட்கட்டை அணியிலிருந்து நீக்க வேண்டும் என்ற வலுவான குரலும் எழுந்துள்ளது.

பழைய வரலாறு

பழைய வரலாறு

உனாட்கட்டை பற்றி சொல்ல வேண்டும் என்றால், தற்போது பாட்ஷா படத்தில் வரும் ஆட்டோ ஓட்டுனர் மாதிரி ரசிகர்களிடம் அடி வாங்கி கொண்டு இருக்கிறார். ஆனால் அவருக்கு இன்னொரு முகம் இருப்பதாக தோனி ரசிகர்கள் பழைய வரலாற்றை கிளறி உண்மையை வெளிகொண்டு வந்துள்ளனர்.

புனே அணியில் உனாட்கட்

புனே அணியில் உனாட்கட்

இதே உனாட்கட் ஐபிஎல் 2017ஆம் ஆண்டு புனே அணிக்காக தோனியுடன் விளையாடினார். கொயங்காவின் சகோதரருடன் ஏற்பட்ட மோதலால், தோனி அந்த சீசனில் கேப்டனாக இல்லை. இருந்தும் எப்போதும் போல் மற்ற வீரர்களுக்கு பந்துவீச அறிவுரை வழங்கினார். ஐதராபாத் அணிக்கு எதிரான 44வது லீக் ஆட்டம் அது.

கடைசி ஓவர்

கடைசி ஓவர்

புனே அணி 148 ரன்களை தான் எடுத்தது. 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் களமிறங்கியது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை இதே உனாட்கட் தான் வீசினார். ஆனால் என்ன நடந்தது தெரியுமா? முதல் பந்து டாட் பால். ஆனால் அடுத்த 3 பந்தும் வேற லெவலில் வீசனார் உனாட்கட்.

ஹாட்ரிக் சாதனை

ஹாட்ரிக் சாதனை

ஆம் அடுத்த 3 பந்திலும் ஹாட்ரிக் விக்கெட். கடைசி 2 பந்தும் டாட் பால் என அந்த மேட்சில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இப்படி ஒரு சாதனையை படைத்த 3வது வீரர் உனாட்கட். அதுமட்டுமல்லாமல் ரஞ்சி கோப்பையில் சௌராஸ்டிரா அணிக்காக சாம்பியன் பட்டத்தை வென்று தந்த முதல் கேப்டன் உனாட்கட் ஆவார். இப்படி பல சாதனையை படைத்தவர், மும்பை அணியின் காலை வாரிவிட்டார். இதை அறிந்ததும் ரசிகர்கள் கிச்சானாலே இளிச்ச வாயன் தானே என்று ரோகித்துக்கு மீம்ஸ் போட்டு கிண்டல் செய்து வருகின்றனர்.

Story first published: Saturday, April 23, 2022, 18:29 [IST]
Other articles published on Apr 23, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+