Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“அதை மட்டும் செய்யுங்க போதும்”.. சிஎஸ்கே வீரர்களுக்கு தோனி எடுத்த பாடம்.. அடுத்த போட்டிக்கு தயார்!!

மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களுக்காக தோனி ஸ்பெஷல் பாடம் எடுத்தது குறித்து தெரியவந்துள்ளது.

ஐபிஎல் தொடர் கடந்த 2 வாரங்களாக பல்வேறு சுவாரஸ்யங்களுடனும், திருப்புமுணையுடன் நடைபெற்று வருகின்றன.

புதிய அணிகள் கூட சிறப்பாக விளையாடும் நிலையில், சிஎஸ்கேவின் நிலைமை மட்டும் பரிதாபமாகவே உள்ளது.

 சிஎஸ்கேவின் சோகம்

சிஎஸ்கேவின் சோகம்

ஐபிஎல் வரலாற்றிலேயே சென்னை அணி ஒரு தொடரின் முதல் போட்டிகளிலும் தோல்வியை பெறுவது இதுவே முதல் முறையாகும். கடந்த சீசன் ப்ளேயிங் 11ல் இருந்த பாதி வீரர்கள் இந்தாண்டும் விளையாடுகிறார்கள். எனினும் தீபக் சஹார் இல்லாதது, கேப்டன்சி மாற்றம் போன்றவைகளால் அந்த அணி சற்று தடுமாறி வருகிறது.

 தோனியின் அட்வைஸ்

தோனியின் அட்வைஸ்

இந்நிலையில் அடுத்த போட்டிக்காக சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தோனியே நேரடியாக களமிறங்கிவிட்டார். வீரர்களுக்கு அவர் பாடம் எடுத்துள்ளாராம். அதில், எதற்கும் முதலில் பதற்றப்படாதீர்கள், நாம் போடும் திட்டங்கள் மற்றும் முயற்சிகளை நம்புங்கள். அதனை சரியாக செய்துவிட்டால் போதும். முடிவுகள் தானாக நம்மை வந்து சேர்ந்துவிடும் எனக்கூறியுள்ளார்.

ருதுராஜுக்கும் அறிவுரை

ருதுராஜுக்கும் அறிவுரை

இதே போல ருதுராஜுக்கும் ஸ்பெஷல் வகுப்பு நடந்துள்ளது. அதில், மிகவும் நிதானமான தொடக்கத்தை கொடுக்கிறார் என்ற விமர்சனத்தை கண்டுக்கொள்ளாதே, உன்னுடைய இயற்கையான ஆட்டத்தை வெளிப்படுத்து. என்ன நடந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என தோனி அறிவுரை தந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எப்போது அடுத்த போட்டி

எப்போது அடுத்த போட்டி

சென்னை அணி அடுத்ததாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக விளையாடவுள்ளது. இந்த போட்டி நாளை மதியம் 3 மணிக்கு DY பாட்டில் மைதானத்தில் தொடங்கவுள்ளது. இரு அணிகளுமே இதுவரை ஒரு வெற்றியை கூட பதிவு செய்யாததால், கடும் போராட்டம் இந்த போட்டியில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Friday, April 8, 2022, 17:32 [IST]
Other articles published on Apr 8, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+