Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நம்ம சிஎஸ்கேவா இது? ப்ளேயிங்11ல் இப்படி ஒரு மாற்றமா செய்வது..குஜராத் போட்டியில் ரசிகர்கள் ஆச்சரியம்

மும்பை: சிஎஸ்கே ப்ளேயிங் 11ல் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியம் தந்துள்ளார் கேப்டன் தோனி.

ஐபிஎல் தொடரின் 62வது லீக் போட்டியில் இன்று சிஎஸ்கே மற்றும் குஜராத் அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள சென்னை அணிக் கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

வெற்றி கட்டாயம்

வெற்றி கட்டாயம்

நடப்பு தொடரில் குஜராத் அணி ஏற்கனவே 18 புள்ளிகளுடன் ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்து விட்டது. சென்னை அணி தொடரில் இருந்து வெளியேறிவிட்டது. எனினும் இந்த போட்டியில் ஆறுதல் வெற்றி பெறுவதற்காகவும், குஜராத் அணிக்கு கலக்கத்தை ஏற்படுத்தவும் கடும் முனைப்புடன் களமிறங்கியுள்ளது.

திடீர் மாற்றம்

திடீர் மாற்றம்

இந்நிலையில் ப்ளேயிங் 11ல் யாரும் எதிர்பார்க்காத மாற்றத்தை கொண்டு வந்துள்ளார். அதாவது மூத்த வீரர்கள் ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயுடு, டுவைன் பிராவோ, மஹீஷ் தீக்‌ஷணா என 4 பேர் ப்ளேயிங் 11ல் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மாற்றாக N.ஜகதீசன், மிட்செல் சாண்ட்னர், பிரஷாந்த் சொலாங்கி, மதீஷா பதிரானா ஆகியோர் வாய்ப்பு பெற்றுள்ளனர்.

 சுவாரஸ்யம்

சுவாரஸ்யம்

சென்னை அணியில் பெரும்பாலும் ப்ளேயிங் 11 மாற்றமே இருக்காது. இக்கட்டான சூழல்களின் போதும் கூட 2 மாற்றங்கள் வரை தான் தோனி செய்வார். ஏனென்றால் ஒரே ப்ளேயிங் 11ஐ பயன்படுத்துவது தான் தோனியின் ஸ்டைல். ஆனால் இன்று 4 முன்னணி வீரர்களை மாற்றம் செய்துள்ளது ரசிகர்களுக்கு ஆச்சரியம் கொடுத்துள்ளது. குஜராத் அணியை பொறுத்தவரையில் எந்தவித மாற்றமும் செய்யவில்லை.

Recommended Video

Dhoni கொடுத்த Signed Match Ball! Kumar Kartikeya செம Happy | CSK vs MI | OneIndia Tamil
 ப்ளேயிங் 11 விவரம்

ப்ளேயிங் 11 விவரம்

சென்னை : ருதுராஜ் கெயிக்வாட், டெவோன் கான்வே, மொயீன் அலி, ஷிவம் தூபே, ஜகதீசன், தோனி, மிட்செல் சாண்ட்னர், பிரஷாந்த் சொலாங்கி, சிமர்ஜீத் சிங், மதீஷா பதிரானா, முகேஷ் சௌத்ரி

குஜராத்: விருதிமான் சாஹா, சுப்மன் கில், மேத்யூவ் வேட், ஹர்திக் பாண்ட்யா, டேவிட் மில்லர், ராகுல் தேவட்டியா, ரஷித் கான், ரவி ஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், அல்சாரி ஜோசஃப், யாஷ் தயால், முகமது ஷமி

Story first published: Sunday, May 15, 2022, 16:02 [IST]
Other articles published on May 15, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+