For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“இரண்டே வழி தான் உண்டு..!!” சிக்கலில் மாட்டி தவிக்கும் தோனி.. சிஎஸ்கேவின் எதிர்காலம் கேள்விக்குறி?

மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது சமநிலையில் இல்லாததால், அதனை சரி செய்வதற்கு இரண்டே விஷயங்கள் மட்டும் தான் தோனிக்கு உள்ளது.

நடப்பு சாம்பியனான சிஎஸ்கே அணி கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சூரத்தில் பயிற்சி செய்துவிட்டு, தற்போது மும்பைக்கு பறந்துள்ளது.

பயிற்சி முகாமை அடிப்படையாக கொண்டு ப்ளேயிங் 11- ஐ தேர்வு ஏற்கனவே தோனி தேர்வு செய்திருப்பார் எனத்தெரிகிறது.

சஹார் ஏன் அவ்வளவு முக்கியம்?

சஹார் ஏன் அவ்வளவு முக்கியம்?

ஆனால் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் எப்படி சரி செய்வது என கேப்டன் தோனிக்கு குழப்பமாக இருந்து வருகிறது. பவர் ப்ளே ஓவர்களில் கடந்த 2018ம் ஆண்டு முதல் தீபக் சஹார் தன ராஜாவாக திகழ்ந்து வருகிறார். இதுவரை 42 விக்கெட்களை சாய்த்துள்ளார். 2வது இடத்தில் ட்ரெண்ட் போல்ட் 27 விக்கெட்களுடன் உள்ளார். தீபக் சஹாரை ஏன் சிஎஸ்கே ரூ. 14 கோடி கொடுத்து வாங்கியதற்கு இதுவே காரணம்.

தோனிக்கு நெருக்கடி

தோனிக்கு நெருக்கடி

மும்பை களம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்பதால், பவர் ப்ளேவில் விக்கெட்கள் தேவை. எனவே அந்த சூழலில் தீபக் சஹார் போன்ற பவுலர் கண்டிப்பாக தேவை. ஆனால் அவருக்கு ஏற்பட்டுள்ள தசைநார் கிழிவு பிரச்சினையால் பாதி தொடரில் விளையாட மாட்டார் என தெரிகிறது. இவருக்கு மாற்றாக யாரை தேர்வு செய்வது என தோனி குழப்பத்தில் உள்ளார்.

சரிசெய்வதற்கான வழி

சரிசெய்வதற்கான வழி

சஹாரின் இடத்தை சரி செய்ய, ஓப்பனிங்கில் ராபின் உத்தப்பாவை கொண்டு வர வேண்டும். அப்படி அவரும், ருதுராஜும் ஓப்பனிங் ஆடினால், கிறிஸ் ஜோர்டன், ஆடம் மில்னே என இரண்டு அயல்நாட்டு வேகப்பந்துவீச்சாளர்களை தோனி பயன்படுத்தலாம். ஆனால் டேவோன் கான்வேவை பயன்படுத்த முடியாத சூழல் உருவாகும்.

ரிஸ்க் எடுக்க வேண்டும்

ரிஸ்க் எடுக்க வேண்டும்

மற்றொரு பலன் என்னவென்றால், புது முக வீரர் தான். U19 உலகக்கோப்பையில் கலக்கிய ராஜ்வர்தன் ஹங்கர்கேகரை தீபக் சஹாரின் இடத்திற்கு கொண்டு வரலாம். அப்படியென்றால் ஓப்பனிங்கில் ருதுராஜ் மற்றும் டெவோன் கான்வே விளையாடுவார்கள். இதுவரை ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவம் இல்லாததால் இந்த ரிஸ்க்கை தோனி எடுப்பாரா என்பது சந்தேகம் தான்.

3 நட்சத்திர வீரர்கள்

3 நட்சத்திர வீரர்கள்

ராஜ்வர்தன் சிஎஸ்கேவின் முதன்மை தேர்வு மட்டும் தான். இன்னும் அவர்களிடம் முகேஷ் சௌத்ரி, துஷார் தேஷ்பாண்டே, சிமார்ஜீத் சிங், கே.எம். ஆசிஃப் என 3 இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் உள்ளனர். இவர்களை வைத்து தோனி அணியின் சமநிலையை உறுதி செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.

Story first published: Friday, March 18, 2022, 10:56 [IST]
Other articles published on Mar 18, 2022
English summary
Skipper Dhoni only have 2 Options to solve the Deepak chahar issue in CSk ahead of IPL 2022
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+