Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“ஓய்வு நியாயமாக இருக்காது”.. சிஎஸ்கேவின் கடைசிப்போட்டி.. கேப்டன் தோனி கூறிய முக்கிய கருத்து!

மும்பை: சென்னை அணியின் கடைசிப்போட்டியில் வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் தோனி களமிறங்கியுள்ளார்.

ஐபிஎல் தொடரின் 68வது லீக் போட்டியில் இன்று சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் எம்.எஸ்.தோனி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

சிஎஸ்கே கடைசி ஆட்டம்

சிஎஸ்கே கடைசி ஆட்டம்

ஐபிஎல் தொடரில் இருந்து ஏற்கனவே வெளியேறிவிட்ட சென்னை அணி தற்போது கௌரவப் பிரச்சினைக்காக விளையாடவுள்ளது. அதாவது இதுவரை 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. எனவே இன்று தோற்றுவிட்டால் கடைசி இடத்திற்கு சென்றுவிடும். எனவே தொடரையாவது வெற்றியுடன் முடிக்க வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளனர்.

 சிஎஸ்கே மாற்றம்

சிஎஸ்கே மாற்றம்

இதற்காக இன்று ஒரே மாற்றம் மட்டும் எம்.எஸ்.தோனி செய்துள்ளார். ஷிவம் தூபேவை நீக்கிவிட்டு, சீனியர் வீரரான அம்பத்தி ராயுடுவை ப்ளேயிங் 11ல் சேர்த்துள்ளனர். தனது ஓய்வு குறித்து பேசிய தோனி, சென்னையில் விளையாடாமல் விடைபெறுவது நியாயமே இல்லை. எனவே ஓய்வு பெற மாட்டேன் எனக்கூறினார்.

ராஜஸ்தானுக்கு கட்டாயம்

ராஜஸ்தானுக்கு கட்டாயம்

இதே போல ராஜஸ்தான் அணிக்கும் இது கட்டாய வெற்றி பெற வேண்டிய போட்டியாகும். ஏனென்றால் இதுவரை 13 போட்டிகளில் ஆடியுள்ள அந்த அணி 8 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றுவிட்டால் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறிவிடும். இதற்காக ஒரே ஒரு மாற்றமாக ஹெட்மெயருக்கு பதில் நீஷமுக்கு வாய்ப்பு தந்துள்ளார்.

ப்ளேயிங் 11 மாற்றம்

ப்ளேயிங் 11 மாற்றம்

சென்னை அணி : ருதுராஜ் கெயிக்வாட், டெவோன் கான்வே, மொயீன் அலி, அம்பத்தி ராய்டு, ஜகதீசன், தோனி, மிட்செல் மார்ஷ், பிரஷாந்த் சொலாங்கி, சிமர்ஜீத் சிங், மதீஷா பதிரானா, முகேஷ் சௌத்ரி

ராஜஸ்தான் ராயல்ஸ்: யாஷஸ்வி ஜெய்ஷ்வால், ஜாஸ் பட்லர், சஞ்சு சாம்சன், தேவ்தத் பட்டிக்கல், சிம்ரான் ஹெட்மெயர், ரியான் பராக், அஸ்வின், ட்ரெண்ட் போல்ட், பிரஷித் கிருஷ்ணா, யுவேந்திர சாஹல், ஒபெட் மெக்காய்

Story first published: Friday, May 20, 2022, 21:04 [IST]
Other articles published on May 20, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+