Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“அதுதான் பிரச்சினையே..தூக்கிடுங்க” ஆர்சிபிக்கு எதிரான சிஎஸ்கே ப்ளேயிங் 11.. பல மாற்றங்கள் செய்த தோனி

ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முக்கிய மாற்றங்களை செய்துள்ளது.

இரு அணிகளும் மோதும் 49வது லீக் போட்டி இன்று புனேவில் உள்ள மைதானத்தில் நடைபெறவுள்ளது.

சிஎஸ்கே அணிக்கு இது வாழ்வா? சாவா? போட்டியாகும். இனி வரும் ஒரு போட்டியில் தோற்றால் கூட ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாது.

தோனி செய்த மாற்றம்

தோனி செய்த மாற்றம்

அதன்படி கடந்த போட்டியில் தோனி மீண்டும் கேப்டனாக பொறுப்பேற்று வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். இவர் இன்றைய போட்டியில் சில பிரச்சினைகளை கண்டறிந்துள்ளார். அதாவது சிஎஸ்கேவின் முக்கிய பிரச்சினை பவுலிங் தான். முகேஷ் சௌத்ரி மட்டும் தான் தற்போது விக்கெட் எடுப்பவராக உள்ளார். மற்றொரு புறம் ரவீந்திர ஜடேஜா தனது மேஜிக்கை காட்டுகிறார். ஆனால் மற்ற வீரர்களிடம் இருந்து ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. எனவே பிரிட்டோரியஸுக்கு பதிலாக இலங்கை வீரர் மதீஷா பதிரானா சேர்க்கப்படலாம்.

சீனியரின் வருகை

சீனியரின் வருகை

சீனியர் பவுலரான டுவைன் பிராவோ ஃபிட்னஸ் காரணமாக கடந்த போட்டியில் வெளியேற்றப்பட்டார். ஒருவேளை அவர் முழு ஃபிட்னஸுடன் இருந்தால் இன்று ப்ளேயிங் 11க்குள் நுழைவார். கடந்த போட்டியில் அறிமுகமான சிமார்ஜீத் சிங்கிற்கு பதிலாக பிராவோ களமிறக்கப்படலாம். அல்லது துஷார் தேஷ்பாண்டேவை மீண்டும் அழைக்கலாம்.

பேட்டிங்கில் மாற்றம்

பேட்டிங்கில் மாற்றம்

ஆர்சிபி அணியில் ஹாசல்வுட், முகமது சிராஜ், ஹர்ஷல் பட்டேல், ஹசரங்கா என அனைத்து பவுலர்களும் ஃபார்மில் உள்ளனர். எனவே அவர்களை எதிர்கொள்ள பேட்டிங் பலமாக தான் உள்ளது. இவர்களுடன் சேர்த்து ஷிவம் தூபேவை மீண்டும் ப்ளேயிங் 11ல் கொண்டு வர தோனி முடிவெடுத்துள்ளார். நடப்பு சீசனில் இவர் தான் சிஎஸ்கேவின் அதிக ரன் ஸ்கோரராக உள்ளார்.

ப்ளேயிங் 11 விவரம்

ப்ளேயிங் 11 விவரம்

ஓப்பனிங் - ருதுராஜ் கெயிக்வாட், டெவோன் கான்வே

மிடில் ஆர்டர் - அம்பத்தி ராயுடு, ராபின் உத்தப்பா,

பவர் ஹிட்டர்ஸ் - எம்.எஸ்.தோனி, ஷிவம் தூபே

ஸ்பின் : ரவீந்திர ஜடேஜா, மஹீஷ் தீக்‌ஷனா

வேகப்பந்துவீச்சாளர்கள் : முகேஷ் சௌத்ரி, மதீஷா பதிரானா, துஷார் தேஷ்பாண்டே/ டுவைன் பிராவோ

Story first published: Wednesday, May 4, 2022, 11:14 [IST]
Other articles published on May 4, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+