Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வேற மஞ்சள் ஜெர்சியானு தெரியாது..? தோனி பேச்சுக்கு அர்த்தம் என்ன? இனி களத்தில் பார்க்க முடியாதா?

புனே: ஐபிஎல் 15வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக தோனி மீண்டும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

Recommended Video

தொடர் தோல்விகளால் ஏற்பட்ட அழுத்தம்.. Dhoni மீண்டும் CSK Captain ஆக பதவியேற்றது ஏன்?

நேற்று ஐதராபாத் அணிக்கு எதிராக நடப்பு சீசனில் முதல் போட்டியில் கேப்டனாக தோனி களமிறங்கனார்.

இதில் சிஎஸ்கே 202 ரன்கள் அடித்தும் , வெறும் 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதுவே ஜடேஜா கேப்டனாக இருந்திருந்தால் அணி தோல்வி அடைந்திருக்கும்.

தோனி சூசகம்

தோனி சூசகம்

இந்த நிலையில், நேற்று டாஸ் போடும் முன் பேசிய கேப்டன் தோனி, அடுத்த ஆண்டும் நிச்சயம் இருப்பேன், அது இந்த மஞ்சள் ஜெர்சிக்கா இல்லை வேறு மஞ்சள் ஜெர்சிக்கா என்று தெரியாது என தோனி கூறியிருந்தார். தோனிக்கு அடுத்த ஆண்டு வயது 41 ஆகி விடும். இதனால் தோனி அடுத்த ஆண்டு விளையாடுவேன் என்கிறாரா இல்லை என்ன சொல்ல வருகிறார் என்று ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர்.

எந்த மஞ்சள் ஜெர்சி

எந்த மஞ்சள் ஜெர்சி

ஒரு சிலர் ரசிகர்கள் மஞ்சள் ஜெர்சி என்றும், தல ஆஸ்திரேலியாவுக்கு விளையாட போகிறார், இல்லை பிரேசில் கால்பந்து அணியின் ஜெர்சியும் மஞ்சள் தான் அங்கே போய் விளையாட போகிறார் என்று கிண்டல் செய்தனர். மேலும் ஒரு சிலர் உகாண்டா அணியின் ஜெர்சி நிறம் கூட மஞ்சள் தாங்க என்று பதிவிட்டு இருந்தனர்.

இது தான் காரணம்

இது தான் காரணம்

ஆனால், வேறு மஞ்சள் ஜெர்சியா என்று கூறியதற்கு உண்மை காரணம் தோனி சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் அல்லது மும்பைக்கு சச்சின் போல் மெண்டராக சிஎஸ்கேக்கு தோனி செயல்பட உள்ளார். இதனை தான் தோனி சூசகமாக தெரிவித்து இருக்கிறார் என்ற தகவலும் வெளிவந்துள்ளது. தோனி ஏற்கனவே டி20 உலக கோப்பைக்கு இந்திய அணியில் ஆலோசகராக பணியாற்றினார்.

பயிற்சியாளராக தோனி?

பயிற்சியாளராக தோனி?

இதனால் அதே போன்ற பொறுப்பை தோனி எதிர்காலத்தில் சிஎஸ்கேக்காக ஏற்கலாம். ஆனால் அது அடுத்த ஆண்டா, இல்லை அதற்கு அடுத்த ஆண்டா என்பது குறித்து தோனியின் உடல் தகுதியும், பேட்டிங் ஃபார்மும் மட்டுமே முடிவு செய்யும். இதனால் களத்தில் தோனியை பார்க்க முடியாதா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இப்போதே எழுந்துவிட்டது.

Story first published: Monday, May 2, 2022, 11:09 [IST]
Other articles published on May 2, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+