Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"அதை யோசிக்கவே மாட்டீங்கிறாங்க.." ஆர்சிபியுடனான தோல்விக்கான காரணம்.. வெளிப்படையாக உடைத்த தோனி!!

மும்பை: ஆர்சிபி அணிக்கு எதிரான தோல்வி குறித்து சிஎஸ்கே கேப்டன் தோனி வருத்தத்துடன் கூறியுள்ளார்.

இரு அணிகளும் மோதிய 49வது லீக் போட்டி நேற்று புனே மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே பந்துவீச்சை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி கடின இலக்கை நிர்ணயித்தது.

கடினமான இலக்கு

கடினமான இலக்கு

ஆர்சிபி அணியில் ஓபனர்கள் விராட் கோலி 30 (33), டூப்ளசிஸ் 38 (22) என சிறப்பான தொடக்கத்தை கொடுத்துவிட்டு வெளியேறினார்கள். அடுத்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்களை இழக்க மஹிபால் லாம்ரோர் 42 (27) அடித்து அணியை மிடில் ஆர்டரில் தூக்கி நிறுத்தினார். கடைசி நேரத்தில் தினேஷ் கார்த்திக் 26 (17) அதிரடி காட்ட ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 173/8 ரன்களை சேர்த்தது.

எப்படி தோற்றது

எப்படி தோற்றது

கடின இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணியிலும் ஓப்பனர்கள் ருதுராஜ் கெய்க்வாட் 28 (23), டெவோன் கான்வே 56 (37) இருவரும் நிதானமாக விளையாடினார்கள். ஆனால் இந்த முறை ருதுராஜ் பெரிய ஸ்கோர் அடிக்காமல் ஏமாற்றினார். அடுத்து வந்த மொயின் அலி 34 (27) சற்று ரன் உயர்த்த மிடில் வரிசையில் உத்தப்பா (1), அம்பத்தி ராயுடு (10), ஜடேஜா (3), தோனி (2) அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் இறுதியில் சிஎஸ்கே 160/8 ரன்கள் எடுத்து, 13 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

தோனியின் விளக்கம்

தோனியின் விளக்கம்

இப்போட்டி குறித்து பேசிய தோனி, பவுலிங்கை சிறப்பாக செய்து 170 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினோம். 2வது இன்னிங்ஸில் மைதானம் அதிகளவில் ஒத்துழைப்பு என நினைத்தேன். அதற்கேற்றார் போல ஓப்பனர்கள் சிறப்பாக செயல்பட்டனர். எனினும் மிடில் ஆர்டர் பெரிதும் ஏமாற்றிவிட்டது. தவறான ஷாட்கள் தான் தோல்விக்கு காரணமாக பார்க்கிறேன்.

என்ன பிரச்சினை இருந்தது

என்ன பிரச்சினை இருந்தது

முதலில் பேட்டிங் செய்தால், மனதில் தோன்றுவதை செய்ய வேண்டும். 2வது பேட்டிங் செய்தால் சூழல் எப்படி உள்ளது என்பதை கணக்கிட்டு தான் ஆட வேண்டும். ஆட்டத்திற்கு தகுந்தது போல ரன்கள் எவ்வளவு தேவை என்பதை தெரிந்துகொண்டு, அதற்கேற்றாற்போல் ஷாட்களை ஆடியிருக்க வேண்டும் என தோனி தெரிவித்துள்ளார்.

Story first published: Thursday, May 5, 2022, 17:55 [IST]
Other articles published on May 5, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+