Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கே ஓப்பனராக அயர்லாந்து வீரர்.. யார் இந்த பால் ஸ்டிர்லிங்.. குறைந்த விலையில் தோனி மாஸ்டர் ப்ளான்

மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அயர்லாந்தை சேர்ந்த பால் ஸ்டிர்லிங் எனும் வீரரை தட்டித்தூக்க திட்டமிட்டுள்ளது.

ஐபிஎல் மெகா ஏலத்திற்காக சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ்.தோனி சமீபத்தில் சென்னைக்கு வருகை தந்து திட்டம் வகுத்துக்கொடுத்தார்.

மெகா ஏலத்தின் போதும் அந்த அணிக்காக கேப்டன் தோனி பங்கேற்று வீரர்களை தேர்வு செய்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிஎஸ்கேவின் திட்டம்

சிஎஸ்கேவின் திட்டம்

அதன்படி தோனியின் முதல் திட்டமாக சிஎஸ்கேவுக்கு ஓப்பனரை தேடுவது தான் இருக்கும். கடந்த சீசன் வரை ருதுராஜுடன் சேர்ந்து டூப்ளசிஸ் சிறப்பான தொடக்கத்தை கொடுத்து வந்தார். ஆனால் மெகா ஏலத்தில் அவருக்கான தொகை தற்போது பல மடங்கு கூடியிருக்கும். எனவே மாற்று வீரரை தான் தேடியாக வேண்டும். டூப்ளசிஸை தவிர்த்து, ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், ஷிகர் தவான் ஆகியோருக்கும் கடும் போட்டிகள் உள்ளன.

அயர்லாந்து ஓப்பனர்

அயர்லாந்து ஓப்பனர்

இந்நிலையில் யாருமே எதிர்பார்க்காத வகையில் அயர்லாந்தில் இருந்து ஓப்பனரை களமிறக்க தோனி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அயர்லாந்து அணியின் பால் ஸ்டிர்லிங் எனும் வீரர் தான் அவர். அந்நாட்டின் முன்னணி வீரரான இவர் டி20 போட்டிகளில் ராஜாவாக திகழ்கிறார். குறிப்பாக பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் அனைவராலும் தேடப்பட்ட வீரர் இவர். 2021ல் கலக்கியதை தொடர்ந்து ட் சமீபத்தில் தொடங்கிய 2022 பிஎஸ்எல் தொடரில் 3 போட்டிகளில் 2 அரைசதங்களை விளாசிவிட்டார்.

திறமைகள் என்ன

திறமைகள் என்ன

31 வயதாகும் பால் ஸ்டிர்லிங் வலதுகை பேட்டிங் மற்றும் ஆஃப் ஸ்பின் பவுலராகவும் இருப்பது சிஎஸ்கேவுக்கு கூடுதல் பலம். இதுவரை 264 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கும் ஸ்ட்ரிங் 6,658 ரன்களை குவித்துள்ளார். இதில் 45 அரைசதங்கள் மற்றும் 2 சதங்கள் அடங்கும். களத்தை புரிந்து அதிரடி காட்டக்கூடிய திறமைப்படைத்தவர்.

Recommended Video

CSKவுக்கு வருவாரா Dinesh Karthik? IPL Auctionல் Dhoniயின் முடிவு என்ன | OneIndia Tamil
தோனி மாஸ்டர் ப்ளான்

தோனி மாஸ்டர் ப்ளான்

கடந்த 2021ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்காக இவர் தன் பெயரை பதிவு செய்த போது, ஏலத்திற்கு தேர்வாகவில்லை. இந்நிலையில் இந்தாண்டு ரூ.50 லட்சம் என்ற அடிப்படை தொகையுடன் களமிறங்கியுள்ளார். யாருமே கண்டுக்கொள்ளாமல் இருக்கும் இவரை அணிக்குள் குறைந்த விலையில் ஏலம் எடுத்துக்கொள்ள தோனி திட்டமிட்டுள்ளார். இவரால் டூப்ளசிஸை போன்றே நல்ல அடித்தளம் அமைக்க முடிவதுமட்டுமல்லாம, தேவைப்படும் நேரங்களில் பவுலிங் தேர்வாகவும் இருப்பார்.

Story first published: Friday, February 4, 2022, 13:23 [IST]
Other articles published on Feb 4, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+