ஐபிஎல் மெகா ஏலம்: தோனி vs கம்பீர்.. ஒரே திட்டத்துடன் களமிறங்கும் சீனியர்கள்.. வெல்லப்போவது யார்?
மும்பை: ஐபிஎல் மெகா ஏலத்தின் போது தோனிக்கும் - கவுதம் கம்பீருக்கும் இடையே குறிப்பிட்ட ஒரு விஷயத்தில் பெரும் போட்டி இருக்கப்போகிறது.
Recommended Video
2022ம் ஆண்டிற்கான ஐபிஎல் மெகா ஏலத்திற்கு இன்னும் 10 நாட்களே உள்ளதால் அனைத்து அணிகளும் கடைசிகட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளன.
அந்த வகையில் சிஎஸ்கே மற்றும் லக்னோ அணிகளின் மீது இந்த முறை அதிக எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.

சிஎஸ்கே லக்னோ மோதல்
ஏனென்றால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மட்டுமல்லாமல், ஆலோசகராகவும் எம்.எஸ்.தோனி இந்த முறை களமிறங்குகிறார். ஒரு வாரத்திற்கு முன்பே சென்னை வந்த அவர் எந்தெந்த வீரர்களை ஏலம் எடுப்பது என்ற திட்டத்தை போட்டு முடித்துள்ளார். இதே போல லக்னோ அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் வீரர் கவுதம் கம்பீரும் தனது பணிகளை முடித்துவிட்டார்.

ஏலத்தில் பங்கேற்பு
இந்நிலையில் இவர்கள் இருவருமே மெகா ஏலத்தின் போது, தங்களது அணிகளுடன் அமரவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு அணியின் கேப்டனும் பெரும்பாலும் மெகா ஏலத்தில் பங்குபெற்று ஏலம் எடுத்ததில்லை. ஆனால் சிஎஸ்கேவின் எதிர்காலத்தை மனதில் வைத்து இந்த முறை தோனி களமிறங்குகிறார். இதற்கு காரணம் மறுமுனையில் கவுதம் கம்பீர் வருவதும், அவர் வைத்துள்ள திட்டமும் தான் எனக் கூறப்படுகிறது.

என்ன திட்டம்
சிஎஸ்கேவில் இந்த முறை குறைந்த பணத்தை மட்டுமே செலவு செய்து திறமையான இளம் வீரர்களையும், அறிமுக வீரர்களையும் குறிவைத்து தூக்க தோனி முடிவெடுத்துள்ளார். இதே திட்டத்தை தான் கம்பீரும் வைத்துள்ளார். இதுகுறித்து பேசியிருந்த அவர், ஐபிஎல் அணிகளின் பழைய ஃபார்முலாவை பின்பற்றாமல் தனி திட்டம் உருவாக்கவிருப்பதாக கூறினார். அதாவது சீனியர் + ஜூனியர் கலந்த அணியாக இல்லாமல் முழுவதுமாக இளம்படையை களமிறக்கவுள்ளதாக கூறினார்.

எந்தெந்த வீரர்கள்
ஷாருக்கான், பிரஷித் கிருஷ்ணா, இஷான் கிஷான், தேவ்தத் பட்டிக்கல், ஹர்னூர் சிங், யாஷ் தல் உள்ளிட்ட பல இளம் வீரர்கள் இந்த முறை அதிக மதிப்புடையவர்களாக உள்ளனர். முற்றிலும் U 19 அணி வீரர்களின் மீதே தோனிக்கும் - கம்பீருக்கும் கடும் மோதல் இருக்கப்போகிறது.


Click it and Unblock the Notifications