Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இது தோனி vs கோலிக்கு முக்கிய நாள்.. ஐபிஎல்-ல் இதுவரை இல்லாத சுவாரஸ்யம்..புள்ளிவிவரம் தந்த சர்ப்ரைஸ்

மும்பை: சிஎஸ்கே vs ஆர்சிபி போட்டியை விட, இன்று தோனி மற்றும் விராட் கோலி இடையேயான மோதல் தான் அதிக பேசுப்பொருளாகியுள்ளது.

இந்த போட்டி மும்பை DY பாட்டில் மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

நடப்பு தொடரில் இதுவரை தொடர்ச்சியாக 4 தோல்விகளை சந்தித்துள்ள சிஎஸ்கே அணி இன்று கம்பேக் கொடுத்தாக வேண்டும்.

சிஎஸ்கே போட்டி

சிஎஸ்கே போட்டி

ஒருபுறம் புதிய கேப்டன் ரவீந்திர ஜடேஜா தலைமையிலான அணி, மற்றொரு புறம் சிஎஸ்கேவின் செல்லப்பிள்ளையாக இருந்த டூப்ளசிஸ் இன்று ஆர்சிபி அணிக்காக எதிர்க்க துணிந்துள்ளார். இந்த மோதலே சுவாரஸ்யமாக இருக்கும் நிலையில், தோனி vs விராட் கோலியின் ரெக்கார்ட் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

கோலியின் சாதனை

கோலியின் சாதனை

சென்னை அணிக்கு எதிரான விராட் கோலி இதுவரை 28 போட்டிகளில் விளையாடி 948 ரன்களை அடித்துள்ளார். அவரின் சராசரி 41.22 ரன்கள் மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 127.25 ஆகும். 5 அரைசதங்களும் அடித்துள்ளார். விராட் கோலி மற்ற எந்தவொரு அணிக்கு எதிராகவும் இப்படி ஒரு ஸ்கோரை அடித்ததில்லை.

தோனி மட்டும் சும்மாவா

தோனி மட்டும் சும்மாவா

இதற்கு தோனியும் ஈடு கொடுக்கிறார். சிஎஸ்கே முன்னாள் கேப்டன் தோனி இதுவரை ஆர்சிபி அணிக்கு எதிராக 31 போட்டிகளில் விளையாடி 836 ரன்களை சேர்த்துள்ளார். அவரின் சராசரி 41.80 ரன்கள் மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 141.22 ஆகும். தோனியும் ஆர்சிபிக்கு எதிராக 5 அரை சதங்களை அடித்துள்ளார். ஐபிஎல்- மற்ற எந்தவொரு அணிக்கு எதிராகவும் தோனி இப்படிப்பட்ட ஸ்கோரை அடிக்கவில்லை.

கூடுதல் சுவாரஸ்யம்

கூடுதல் சுவாரஸ்யம்

இப்படி சரிசமமான ரெக்கார்ட் உள்ளதால், இன்று விராட் கோலி vs தோனி மோதல் தான் நடைபெறவிருக்கிறது என ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இதற்கேற்றார் போலவே தோனியும் தற்போது நல்ல ஃபார்மில் இருப்பதால் எதிர்பார்ப்பு ஏகபோகத்திற்கு எகிறியுள்ளது.

Story first published: Tuesday, April 12, 2022, 22:09 [IST]
Other articles published on Apr 12, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+