Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நடுவரை பார்த்து "அந்த" வார்த்தை.. தினேஷ் கார்த்திக் மீது கடும் நடவடிக்கை.. ஏன் அவ்வளவு கோபம்?

கொல்கத்தா: ஐபிஎல் தொடரில் எலிமினேட்டர் போட்டியின் போது, நடுவரை பார்த்து அந்த வார்த்தை சொல்லி திட்டியதால், தினேஷ் கார்த்திக் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி இந்திய அணியில் 3 ஆண்டுக்கு பிறகு இடம் பிடித்துள்ளார் தினேஷ் கார்த்திக்.

எல்லாம் நல்லதாக நடக்கும் நேரத்தில் கோபத்தால் தினேஷ் கார்த்திக் அனைத்து வாய்ப்பையும் வீணடிக்கும் அபாய சூழல் ஏற்பட்டுள்ளது.

ஆவேஷ் கான் பந்து

ஆவேஷ் கான் பந்து

ஐபிஎல் எலிமினேட்டர் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 207 ரன்களை எடுத்தது. ரஜத் பட்டிதாரும் , தினேஷ் கார்த்திக்கும் களத்தில் நின்ற போது தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆட்டத்தின் 20வது ஓவரை லக்னோ அணியின் ஆவேஷ் கான் வீசினார். அப்போது, அவர் பந்தை நன்றாக ஓயிடாக வீசினார்.

அந்த வார்த்தை

அந்த வார்த்தை

இதனால் கடுப்பான கார்த்திக், அவரும் ஸ்டம்பை விட்டு நகர்ந்து வந்து அடிக்க முயன்றும் பந்து பேட்டில் படவில்லை. இதற்கு நடுவர் ஓயிடு தரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த தினேஷ் கார்த்திக், நடுவரை பார்த்து What the F*** man என்று அந்த வார்த்தையால் திட்டினார். இது ஸ்டம்பில் இருந்த மைக்கில் தெளிவாக பதிவானது.

உண்மையை ஒப்பு கொண்டார்

உண்மையை ஒப்பு கொண்டார்

இது தொடர்பாக போட்டி நடுவர், தினேஷ் கார்த்திக்கிடம் புகார் குறித்து விசாரித்தார். அதற்கு தினேஷ் கார்த்திக் உண்மையை ஒப்புக் கொண்ட தனது செயலுக்கு மன்னிப்பு கோரினார். இதனையடுத்து, ஐபிஎல் விதிகளை தினேஷ் கார்த்திக் மீறியதாக அறிவிக்கப்பட்டது. அவருக்கான தண்டனை விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

சர்ச்சை

சர்ச்சை

கடின உழைப்பால் இந்திய அணிக்கு திரும்பியுள்ள தினேஷ் கார்த்திக், தற்போது முதல் முறையாக சர்ச்சையில் சிக்கியுள்ளது, ரசிகர்களை கவலை அடைய செய்துள்ளது. போக வேண்டிய தூரம் நிறைய இருப்பதால், கார்த்திக் பிரான்சைஸ் அணிக்காக எல்லாம் கோபப்பட்டு, மெயின் டார்கெட்டான இந்திய அணியை விட்டு விட கூடாது என்று ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Story first published: Friday, May 27, 2022, 16:28 [IST]
Other articles published on May 27, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+