For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஃபினிஷராக மாறிய ஹர்ஷல் பட்டேல்.. ராஜஸ்தானை வச்சு செய்த தினேஷ் கார்த்திக்.. ஆர்சிபி த்ரில் வெற்றி!!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

மும்பை வான்கடேவில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களுரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது.

 ராஜஸ்தானின் சொதப்பல்

ராஜஸ்தானின் சொதப்பல்

டேவிட் வில்லி வீசிய 2வது ஓவரில் யாஷாஸ்வி ஜெய்ஸ்வால் 4 ரன்களுக்கு வெளியேறியேறினார். இதன் பின்னர் சரிவில் இருந்த ராஜஸ்தான் அணியை பட்லர் - தேவ்தத் பட்டிக்கல் ஜோடி மீட்டுக்கொண்டு வந்தது. இருவரும் சீரான வேகத்தில் ரன் குவிக்க, ராஜஸ்தான் அணியின் ஸ்கோர் 6 - 1 என்ற நிலையில் இருந்து 76 என்ற நிலைக்கு வந்தது.

 கடைசி நேர ட்விஸ்ட்

கடைசி நேர ட்விஸ்ட்

சிறப்பாக ஆடி வந்த தேவ்தத் பட்டிக்கல் 37 ரன்களுக்கு வெளியேற மறுமுணையில் ஜாஸ் பட்லர் தூண் போன்று நிலைத்து நின்றார். அவரும் ஹெட்மெயரும் சேர்ந்து ஆர்சிபியின் பவுலிங்கை அடித்து நொறுக்கினர். கடைசி 2 ஓவர்களில் மட்டும் 42 ரன்கள் சேர்ந்தன. இதனால் 20 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட் இழப்புக்கு 169 ரன்களை குவித்தது. பட்லர் 70 ரன்களுடனும், ஹெட்மெயர் 42 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ஆர்சிபியின் தொடக்கம்

ஆர்சிபியின் தொடக்கம்

170 என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணிக்கு முதல் விக்கெட்டே 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைந்தது. எனினும் அது நீண்ட நேரம் நீடிக்கவில்லை. கேப்டன் டூப்ளசிஸ் 29 ரன்களும், அனுஜ் ராவத் 26 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து வெளியேறினர். யுவேந்திர சாஹல் தான் திருப்புமுணையை கொடுத்தார்.

அடுத்தடுத்து விக்கெட்கள்

அடுத்தடுத்து விக்கெட்கள்

இங்கிருந்து பெங்களூரு அணியின் சரிவு தொடங்கியது. அணியின் சீனியர் வீரர் விராட் கோலி 5 ரன்களுக்கு துரதிஷ்டவசமாக ரன் அவுட்டானார். டேவிட் வில்லி டக் அவுட், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் 5 ரன்களுக்கும் ஆட்டமிழக்க 87 ரன்களுக்குள் 5 விக்கெட்களை இழந்து ஆர்சிபி அணி மோசமாக தடுமாறியது.

மீட்ட அதிரடி ஜோடி

மீட்ட அதிரடி ஜோடி

இந்த சூழலில் ஜோடி சேர்ந்த தினேஷ் கார்த்திக் - சபாஷ் அகமது ஜோடி யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிரடி காட்டினர். 6வது விக்கெட்டிற்கு மட்டும் இவர்கள் 67 ரன்களை சேர்த்தனர். இதனால் ஆர்சிபி அணி 18 பந்துகளில் 26 ரன்கள் அடித்தால் போதும் என்ற எளிதான நிலைக்கு வந்தது. இறுதியில் சபாஷ் அகமது 45 ரன்களுக்கு அவுட்டாக, தினேஷ் கார்த்திக் முழு பொறுப்பையும் கையில் எடுத்தார்.

 கடைசி 2 ஓவர்கள்

கடைசி 2 ஓவர்கள்

கடைசி 12 பந்துகளில் 15 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது. அப்போது சற்றும் பதற்றப்படாமல், சரியான பந்துகளை தேர்வு செய்து பவுண்டரிக்கு விரட்டினார். 19வது ஓவரில் தினேஷ் கார்த்திக் 2 பவுண்டரிகளை அடிக்க, 20 ஓவரில் ஸ்ட்ரைக்கிற்கு வந்த ஹர்ஷல் பட்டேல் திடீரென சிக்ஸரை பறக்கவிட்டு ஆச்சரியப்படுத்தினார். இதனால் 19 ஓவர்களில் ஆர்சிபி அணி 6 விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி வெற்றி பெற்றது. நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் பெறும் முதல் தோல்வி இதுவாகும்.

Story first published: Tuesday, April 5, 2022, 23:49 [IST]
Other articles published on Apr 5, 2022
English summary
RCB beats RR ( ராஜஸ்தானை வீழ்த்தியது ஆர்சிபி அணி ) ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தினேஷ் கார்த்திக் காட்டிய கடைசி நேர அதிரடியால் ஆர்சிபி அணி த்ரில் வெற்றி பெற்றது.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+