Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸ்திரேலியாவுக்கு ஒரு டிக்கெட் போடுங்க.. இந்திய அணிக்குள் வரும் தினேஷ் கார்த்திக்.. ரோகித் பிளான்

மும்பை: ஐபிஎல் தொடரின் 15வது சீசனில் தினேஷ் கார்த்திக் அசத்தி வருவதால், அவருக்கு விரைவில் இந்திய அணியில் இடம் கிடைக்க உள்ளது.

நடப்பு சீசனின் முதல் வாரத்தில் இளம் வீரர்கள் அசத்தி வந்தாலும், தினேஷ் கார்த்திக் போன்ற சீனியர்களும் தங்களது திறமையை நிரூபித்து வருகின்றனர்.

இந்த சீசனில் தொடர்ந்து 2 போட்டியில் ஆர்சிபி அணியை தனி ஆளாக நின்று தினேஷ் கார்த்திக் காப்பாற்றி வெற்றி பெற வைத்துள்ளார்.

வர்ணனையாளர்

வர்ணனையாளர்

ஐபிஎல் மெகா ஏலத்தில் கடும் போட்டிக்கு பிறகு தினேஷ் கார்த்திக்கை பெங்களூரு அணி வாங்கியது. கடைசியாக இந்தியாவுக்காக 2019ஆம் ஆண்டு உலககோப்பை தொடரில் தான் தினேஷ் கார்த்திக் விளையாடினார். அதன் பின் வாய்ப்பு கிடைக்காததால், வர்ணனையாளராக தனது பணியை தொடங்கினார்.

விரக்தி

விரக்தி

அப்போதே ரோகித் சர்மா, உங்களிடம் இன்னும் நிறைய கிரிக்கெட் இருக்கிறது ஏன் இந்த முடிவு என ரோகித் கேட்டதற்கு. ஆம், எனக்கு தெரியும், வேறு வழியில்லை என்று தினேஷ் கார்த்திக் பதில் அனுப்பி இருந்தார். இந்த நிலையில், தமிழக ரஞ்சி அணியிலிருந்து தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டார். இது தினேஷ் கார்த்திக்கை மேலும் விரக்தி அடைய செய்தது.

அசத்தல் பேட்டிங்

அசத்தல் பேட்டிங்

ஏற்கனவே கொல்கத்தா அணியும் இவரை கழற்றிவிட்டதால் வரும் ஐபிஎல் தொடருக்காக தனது திறமையை நிரூபிக்க தினேஷ் கார்த்திக் காத்திருந்தார். அதற்கு ஏற்றார் போல் ஆர்சிபியில் இவருக்கு ஃபினிஷர் ரோல் தரப்பட்டது. முதல் போட்டியில் 14 பந்துக்கு 32 ரன்கள் விளாசிய கார்த்திக், 2வது ஆட்டத்தில் 7 பந்துக்கு 14 ரன்கள் அடித்தார்.

இந்திய அணியில் இடம்

இந்திய அணியில் இடம்

நேற்று பலம் வாய்ந்த ராஜஸ்தான் அணியிடம் பெங்களூரு அணி 87 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறியது. அப்போது களத்திற்கு வந்த கார்த்திக், 23 பந்துகளில் 44 ரன்கள் விளாசினார். நடப்பு ஐபிஎல் தொடரில் தினேஷ் கார்த்திக்கின் ஸ்ட்ரைக் ரேட் 204.5. இதனால் தினேஷை டி20 உலககோப்பைக்கான இந்திய அணியில் சேர்க்க ரோகித் சர்மா முடிவு எடுத்துள்ளார். இதனால் சஞ்சு சாம்சன் அல்லது ராகுலின் இடத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

Story first published: Wednesday, April 6, 2022, 14:57 [IST]
Other articles published on Apr 6, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+