Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

5 முறை சாம்பியனுக்கு வந்த ஆபத்து..!! சிக்கலில் சிக்கிய மும்பை இந்தியன்ஸ்.. தப்பிக்குமா அம்பானி படை?

மும்பை: ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணி தற்போது சிக்கலில் மாற்றி கொண்டுள்ளது.

தற்போது 10 அணிகள் இந்த சீசனில் பங்கேற்றுள்ளதால் , 2011 முறைப்படி ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளது.

ஒவ்வொரு பிரிவிலும், ஒரு அணி மற்ற அணிகளுடன் 2 முறை மோதும்.மேலும், அடுத்த குரூப்பில் உள்ள 4 அணிகளிடம் ஒரு முறையும், ஒரு அணியுடன் மட்டும் 2 முறை மோதும்.

மும்பைக்கு சிக்கல்

மும்பைக்கு சிக்கல்

அந்த வகையில், அதன் குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா, ராஜஸ்தான், டெல்லி, லக்னோ ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. அடுத்த குரூப்பில் உள்ள சென்னை அணியுடன் 2 முறை மோதும் வகையில் அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது. இதில் தான் மும்பை அணிக்கு சிக்கல் எழுந்துள்ளது.

ஆபத்தான ராயல்ஸ்

ஆபத்தான ராயல்ஸ்

மும்பை அணியை பொறுத்தவரை தற்போது குருப் ஆஃப் டெத் என அழைக்கப்படும் , ஆபத்தான பிரிவில் மும்பை சிக்கியது. அதாவது மும்பை அணி இடம்பிடித்துள்ள குரூப்பில் அனைத்து அணிகளும் பலமானவை. குறிப்பாக ராஜஸ்தான் அணியுடன் 22 முறை மோதியுள்ள மும்பை அணி 11 போட்டியில் வெற்றி 11 போட்டியில் தோல்வியை தழுவியுள்ளது.

சவாலான டெல்லி

சவாலான டெல்லி

இம்முறையும் ராஜஸ்தான் பலமான அணியாகவே உள்ளது. அதே போல் பெலம் வாய்ந்த டெல்லி அணியையும் மும்பை 2 முறை சந்திக்க உள்ளது. இதில் மும்பை அணி 29 முறை டெல்லியுடன் மோதி 16 வெற்றி 13 போட்டியில் தோல்வியை தழுவியுள்ளது. கொல்கத்தா அணியை தான் மும்பை இதுவரை அதிகமுறை வீழ்த்தியுள்ளது. ஆனால் இது முற்றிலும் புதிய சீசன் என்பதால், அதுவும் பலமாக தான் உள்ளது.

மும்பைக்கு செக்

மும்பைக்கு செக்

சென்னை அணியை பற்றி கேட்கவே வேண்டாம். 2 அணிகளும் மோதினால் தான் பிசிசிஐக்கு கல்லா கட்டும். சென்னை அணியை எதிர்கொள்வதும் மும்பைக்கு அவ்வளவு எளிதாக இருக்காது. இதே போன்று லக்னோ அணியும் புதிய அணி என்பதால், அதை மும்பையால் கணிக்கவும் முடியாது. இப்படி சுற்றிலும் மும்பை அணிக்கு செக் வைக்கப்பட்டுள்ளது.

Recommended Video

IPL 2022: Mumbai Indians Full Squad | MI Players List | OneIndia Tamil
சுழற்பந்து

சுழற்பந்து

மேலும், வான்கடே மைதானத்தில் தான் போட்டிகள் நடைபெறும், சமாளித்துவிடலாம் என மும்பை அணி நினைத்திருக்கும். அதற்கும் ஆப்பு வைப்பது போல் 4 போட்டிகள் தான் அங்கு மும்பைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதே போன்று டி.ஓய். பாட்டில், பார்பவுன் மற்றும் புனே ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான மைதானங்கள். ஆனால் மும்பை அணியிடம் சிறந்த சுழற்பந்துவீச்சாளர்கள் இல்லை.

Story first published: Friday, February 25, 2022, 18:38 [IST]
Other articles published on Feb 25, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+