தோனியை மாதிரியே இருந்துச்சி.. ஆர்சிபி கேப்டனாக டூப்ளசிஸ் கூறிய விஷயம்.. சிஎஸ்கே ரசிகர்கள் நெகிழ்ச்சி
மும்பை: தினேஷ் கார்த்திக் குறித்து ஆர்சிபி கேப்டன் டூப்ளசிஸ் கூறிய வார்த்தைகள் சிஎஸ்கே ரசிகர்களை ஆச்சரியமடைய வைத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதின.
இதில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணியில் அனைத்து வீரர்களுமே சொதப்பினர். அதிகபட்ச ஸ்கோரே ரஸல் அடித்த 25 ரன்கள்தான். இதனால் 18.5 ஓவர்கள் அந்த அணி 128 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

தடுமாறிய ஆர்சிபி
129 என்ற குறைந்த இலக்கை நோக்கி களமிறங்கிய ஆர்சிபி இந்த முறை பேட்டிங்கில் சொதப்பியது. கேப்டன் டூப்ளசிஸ் (5), அனுஜ்வாட் (0), கோலி ( 12), டேவிட் வில்லி ( 12 ) என அடுத்தடுத்து வெளியேறினர். இடையில் ரூதர்ஃபோர் (27), சபாஷ் அகமது பார்ட்னர்ஷிப் அமைத்தனர். எனினும் அது நீண்ட நேரம் நீடிக்காததால் 111 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து ஆர்சிபி தடுமாறியது.

கடைசி நேர சிக்கல்
கடைசி 2 ஓவர்களில் 17 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் பிட்ச்-ல் நல்ல ஸ்விங் இருந்ததால் தூக்கி அடித்தால், விக்கெட் போகும் என்ற சூழல் உருவானது. அப்போதும் தினேஷ் கார்த்திக் மிக நிதானமாக இருந்தார். ஹர்ஷல் பட்டேல் 19வது ஓவரில் 10 ரன்களை அடிக்க, கடைசி ஓவரில் தினேஷ் கார்த்திக் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு பவுண்டரி மற்றும் சிக்ஸர் என அடுத்தடுத்து விளாசி அபார வெற்றியை பெற்றுத்தந்தார். முதல் போட்டியிலும் இவர் 14 பந்துகளில் 32 ரன்கள் விளாசியிருந்தார்.

டூப்ளசிஸின் வார்த்தைகள்
ஆட்டத்திற்கு பிறகு பேசிய கேப்டன் டூப்ளசிஸ், மிக மகிழ்ச்சியாக உள்ளது. சிறிய வித்தியாசத்தில் பெறும் வெற்றிகள் மிகவும் முக்கியமானது. இன்று ஸ்விங்க், பவுன்ஸ் இருந்ததால் சிரமமாகிவிட்டது. 2 நாட்களுக்கு முன்னர் இதே மைதானத்தில் 200+ ரன்கள் இன்று 130 ரன்கள். ரன்கள் எங்களுக்கு பிரச்சினையே கிடையாது. கையில் விக்கெட்டுகளை வைத்திருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தவுள்ளோம்.
Recommended Video

தோனியின் சாயல்
இக்கட்டான சூழல்களை கூட மிக நிதானமாக கையாள்வதில் தோனியை போன்றே இருக்கிறார் தினேஷ் கார்த்திக். அவரின் அனுபவம் மிக உதவியாக உள்ளது. நான் எப்போதுமே அடுத்தவர்களின் உதவியையும் கேட்பேன். அந்த வகையில் அணியில் எனக்கு பலரும் பல யோசனைகளுடன் வருகின்றனர். மகிழ்ச்சியாக இருக்கிறது என டூப்ளசிஸ் பகிர்ந்தார்.


Click it and Unblock the Notifications