“ஏய்.. இரு இரு.. அது இப்ப வேண்டாம்”.. களத்தில் பிரிட்டோரியஸுக்கு தோனி சொன்ன டிப்ஸ்.. சுவாரஸ்ய தகவல்!
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் தோனி கடைசி நேரத்தில் கொடுத்த டிப்ஸ் குறித்து சிஎஸ்கே வீரர் பிரிட்டோரியஸ் பகிர்ந்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் மும்பை அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வீழ்த்தியது.
கடைசி ஓவரில் தோனி விளாசிய சிக்ஸர்களால் சென்னை அணி வரலாற்று வெற்றியை தனதாக்கியது.

சிஎஸ்கே வெற்றி
சென்னை அணியின் டாப் ஆர்டர் சரிந்த போது, 7வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த தோனி - டுவைன் பிரிட்டோரியஸ் ஜோடி 33 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதில் பிரிட்டோரியஸ் 14 பந்துகளில் 22 ரன்களை விளாசி சிஎஸ்கேவை முன்னேற்றினார். பின்னர் தோனி கடைசி 4 பந்துகளில் 6, 4, 2, 4 என அடுத்தடுத்து விளாசி வெற்றி பெற்றுக்கொடுத்தார்.

பிரிட்டோரியஸின் தகவல்
இந்நிலையில் களத்தில் தோனியுடன் நடந்த முக்கிய விஷயத்தை பிரிட்டோரியஸ் பகிர்ந்துள்ளார். அதில், ஆட்டத்தின் 17வது ஓவரில் பும்ராவின் யார்க்கரை ஸ்கூப் ஷாட் ஆட முயன்றேன். ஆனால் அப்போது தோனி, ஏய், வெயிட்.. வெயிட்.. இப்போது இது வேண்டாம்.. பின்னர் பார்த்துக் கொள்ளலாம் எனக்கூறினார். நானும் பொறுமையாக இருந்தேன்.

ஓகே சொன்ன தோனி
அதன்பின்னர் பும்ராவின் 19வது ஓவரில் நான் ஸ்கூப் ஷாட்டிற்கு செல்லவா என தோனியிடம் கேட்டேன். அப்போது அவர் இப்போது அடி, சரியாக இருக்கும் எனத்தெரிவித்தார். அதே போலவே அந்த பந்து சரியாக பொறுந்தி பவுண்டரி கிடைத்தது. அவர் உண்மையிலேயே ஒரு சிறந்தவர் என பிரிட்டோரியஸ் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

வாய்ப்பே இல்லை
டுவைன் பிரிட்டோரியஸுக்கு சிஎஸ்கேவில் வாய்ப்பே கிடைக்காமல் தான் இருந்தது. சிஎஸ்கேவுக்காக விளையாடிய நேற்று தான் 2வது போட்டியில் ஆடினார். தற்போது தனது இடத்தை கெட்டியாக பிடித்துக்கொண்டார். மேலும் இனி வரும் போட்டிகளிலும் வெற்றிக்கு உதவுவேன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications